December 6, 2025, 6:16 AM
23.8 C
Chennai

தமிழகத்தின் வினை தீருமா..?!

rn ravi tn governor
rn ravi tn governor

விநாயகர் சதுர்த்தியன்று தமிழக வினை தீர்க்க ஒரு அதிரடி நடவடிக்கையினை மத்திய அரசு எடுத்துள்ளது. ஆம், மதிப்பிற்குரிய ரவிந்திர நாராயணன் ரவி தமிழக ஆளுநராக நியமிக்கபட்டுள்ளார் இது மிக பெரிய திருப்பம்

இதுவரை தமிழக ஆளுநர்களாக முன்னாள் அரசியல்வாதிகள், கட்சிக்காரர்கள் இல்லை மத்திய அரசில் யாருக்கோ அல்லது மாநில அரசு விரும்பி கேட்டு கொண்டவர்களே ஆளுநராக இருந்தார்கள்

முதல் முறையாக உளவு மற்றும் காவல்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட சுருக்கமாக சொன்னால் அஜித் தோவலுக்கு அடுத்த இடத்தில் உள்ளவர் நியமிக்கபட்டிருப்பது இதுதான் முதல்முறை

ஆர்.என்.ரவி என அழைக்கபடும் இந்த புதிய ஆளுநர் பாட்னாவில் பிறந்தவர், 1976ல் காவல்துறைக்கு வந்து கேரளாவில் பணியாற்றி பின் மத்திய உளவுத் துறைக்கு மாற்றபட்டவர்

இந்தியாவின் மிக சிறந்த நடவடிக்கைகளில்லாம் அவருக்கு பங்கு உண்டு, காஷ்னீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அமைதி திரும்ப மிகபெரிய நடவடிக்கை எடுத்தவர்

வெளிதெரியா சாகசங்கள் நிறைய உண்டு, மாறுவேடங்களில் உயிருக்கு அஞ்சாமல் நக்சலைட்டுகளுக்குள் ஊடுருவியவர், கள நிலவரத்தை அறிந்து வந்தவர் என மிகபெரிய சாகசங்களை செய்தவர். இவருக்கு மேல் அதிகாரியாக இருந்தவர்தான் அஜித் தோவல்

அது காங்கிரஸ் ஆட்சிகாலங்கள் ஒரு கட்டத்துக்கு மேல் நடவடிக்கை எடுக்கமுடியாமல் அஜித் தோவலின் கரங்காள் கட்டபட்ட காலங்கள் என்பதால் முடிந்தவரை பாடுபட்டார் ரவி. 2012ல் ஓய்வும் பெற்றார்.

2014ல் மோடி வந்தார், மோடி வந்ததும் செய்த ஆகசிறந்த காரியம் மிக திறமையான பணியாளர்கள் ஓய்வில் இருந்தாலும் அழைத்து வந்து தேசப் பணிக்கு அமர்த்துவது. நிச்சயம் இது மிகசிறந்த அணுகுமுறை

அதிதான் வடகிழக்கு மற்றும் காஷ்மீர் பக்கம் நீண்ட அணுகுமுறை கொண்ட ரவியினை நாகலாந்து விவகாரங்களுக்க்கான அலுவலராக‌ அறிவித்தார் மோடி

ரவியும் மிக சாதுர்யமமாக கடமையாற்றி நாகலாந்தில் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்து 2016லே அங்கு தீவிரவாதிகளை ஆயுதத்தை கீழே போட செய்து சமாதானத்தை நிறுவினார்

நிச்சயம் பஞ்சாபில் தீவிரவாதத்தை வேறறுக்க கில்லும் அஜித்தோவாலும் அரும்பாடு பட்டதை போல நாகலாந்தில் அமைதியினை நிலைநாட்டினார் ரவி

மோடி 2018ல் அவரை அஜித்தோவலுக்கு அடுத்தபடியாக துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக்கினார்

பின் 2019ல் அதே நாகலாந்துக்கு ஆளுநரும் ஆக்கினார் மோடி, அதாவது தீவிர்வாதம் அங்கே மீண்டும் தலையெடுக்காமல் முழுக்க ஒழிக்க செய்யப் பட்ட ஏற்பாடு அது

இப்பொழுது வடகிழக்கு மாநிலங்களில் அமைதி பூரணமாக திரும்பியதை அடுத்து தமிழகத்துக்கு அவர் அனுப்படுகின்றார். இது தமிழகத்துக்கு மகா புதிது, ஒரு வகையில் திராவிட கும்பலுக்கு பலத்த அதிர்ச்சி

இந்தியாவின் குழப்பமான மாநிலங்களில் தமிழகமும் ஒன்று, ஆனால் காஷ்மீர் பஞ்சாப் வடகிழக்கு போல் ஆயுதம் இல்லாத ஒன்றுதான் ஆறுதல். அவர்கள் ஆயுதமுனையில் தனிநாடு கோரி அட்டகாசம் செய்ததால் தேசம் அவர்களுக்கே முதலுரிமை கொடுத்தது.

திராவிட கும்பலும் பிரிவினைவாத கும்பல்தான் ஆனால் தனிநாடு கேட்கமாட்டார்கள், அவர்களின் ஒரே குறி ஆட்சியில் பங்குபெற்று கொள்ளை அடித்து கொண்டே இருப்பது, கொள்ளையில் சம்பாதித்ததை காக்க மறுபடி ஆட்சியில் இருக்க முயற்சிப்பது

இதுதான் அவர்கள் கொள்கை இதற்கு அவர்கள் வைத்த பெயர் “மாநில சுயாட்சி”

அதே நேரம் இலங்கை புலிகளுடன் சேர்ந்து இங்கு ஆயுத கலாச்சாரத்தை வளர்க்க முயன்றதை முளையிலே கிள்ளி எறிந்தது இந்தியா, இவர்களும் அதை ஏற்றும் கொண்டார்கள். காரணம் இவர்களுக்கு தனிநாடு கோரும் தைரியமோ ஆயுதம் ஏந்தும் திட்டமோ கிடையாது, ஒரே நோக்கம் ஊழல்

இந்த ஊழலுக்குத்தான் அவர்கள் ஆட்சிக்கு வர துடிக்க அவர்களை வைத்து எப்படி இந்தியாவில் குழப்பம் விளைவிக்கலாம் என மிஷனரிகள் அணுக, அவர்களோடு அரேபிய ஊடுருவலும் உண்டு

இது 1960 முதல் இங்கே நடக்கும் காட்சி. இதில் மிகபெரிய அழிவுகளும் நடந்தன, காமராஜர் தோற்று தேசியம் மறைந்ததில் இருந்து இந்திரா கொலைமுயற்சி, ராஜிவ் கொலை, கோவை குண்டுவெடிப்பு என ஏகபட்ட அழிவுகளும் கொடுமைகளும் நடந்தன‌.. காங்கிரசும் இதை மறந்தது, திராவிடம் அதை தொடர்ந்தது

மத்தியில் ஆட்சியில் இல்லாதபொழுதெல்லாம் தமிழகத்தில் தேசவிரோதமாக இந்துவிரோதமாக ஆடி தீர்க்கும் திமுக இப்பொழுது மறுபடியும் தன் அடுத்த தலைமுறை இன்னிங்க்ஸை தொடங்கியது .. ஆட்சிக்கு வந்ததில் இருந்து “ஒன்றிய அரசு” என்பதில் இருந்து “அர்ச்சகர்” திட்டம்வரை அது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்திற்று… இதனிடையே இன்னும் இம்சைகள் அதிகரித்தன‌

மிஷனரி கைகூலிகள் ஆங்காங்கே மாநில அட்சியில் ஊடுருவினர், முக்காலமும் தேச எதிர்ப்பும் திராவிடம் எனும் பெயரில் கிறிஸ்துவ அட்டகாசம் இன்னும் பல அட்டகாசங்களை செய்வோர் எல்லாம் பதவிக்கு நியமிக்கபட்டனர். மிக மிக மோசமான காலம் நோக்கி தமிழகம் வீழத் தொடங்கியது

இந்நிலையில்தான் வடகிழக்கில் மிக நீண்ட அனுபவம் கொண்ட, அதாவது கிறிஸ்தவ மிஷினரிகளால் குழப்பம் அடைந்து மிக பெரிய மிரட்டலாக உருவெடுத்த அந்த மாநிலங்களில் அவர்களின் சதியினை முறியடித்த ரவி போன்றவர்களை தமிழகத்துக்கு ஆளுநராக நியமிகின்றது மோடி அரசு

இவர் அஜித் தோவலின் நெருங்கிய அதிகாரி என்பதால் ஏற்கனவே தமிழக கடத்தல், தீவிரவாதம், பிரிவினை, ரகசிய அரசியல் எல்லாம் அவருக்கு அத்துபடி

மொத்தத்தில் குட்டிசாத்தான்கள் தலைவிரித்து ஆட தொடங்கிய நிலையில் சக்திவாய்ந்த தேவதையினை அனுப்புகின்றார் மோடி

இனி தமிழக காட்சிகள் ஒவ்வொன்றாய் மாறும், இந்த திராவிட அழிச்சாட்டியம், புலி, பிரிவினைவாதம், ஒன்றியம் இன்னும் மகா மட்டமான தேசபிரிவினைவாத மெல்லாம் அடங்கும்

75 வருடமாக காங்கிரஸ் செய்யாததை முதல் முறையாக மிக சரியாக செய்திருக்கும் மோடிக்கு வாழ்த்துக்கள்

இதுவரை திமுக கண்டதெல்லாம் சொத்தை ஆளுநர்கள், பத்மநாபா கொலையினையில் கூட அப்போதைய ஆளுநர் அமைதியாக இருந்ததை காணபொறுக்காமல் டெல்லிதான் திமுக ஆட்சியினை டிஸ்மிஸ் செய்தது

ஆளுநர் என்றால் பதவிபிரமாணம் செய்துவிப்பார்கள், விழாவுக்கு வருவார்கள் அவ்வளவுதான், தேநீர் தருவார்கள் விருந்து தருவார்கள் சும்மா பொம்மையாக இருப்பார்கள் என்பதுதான் இவர்கள் கண்ட ஆளுநர்கள், அப்படித்தான் கருதி கொண்டிருந்தார்கள்

அப்படி ஆளுநர்களை கண்டுதான் “ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்ணரும் தேவையே” என கேட்டு கொண்டிருந்தார்கள்

இனி ஆட்டின் முதுகில் சாட்டையினை ஓங்கி வைக்கும் பொழுதுதான் ஆளுநரின் அவசியமும் அதிகாரமும் புரியும்

சுருக்கமாக சொன்னால் இப்படி சொல்லலாம்… இதெல்லாம் இஸ்ரேலிய பாணி, அமெரிக்காவிலும் இது உண்டு

ஆம், நாட்டுக்காய் உளவுபணி ஆபத்தான காவல்பணியில் இருந்தவர்கள் ஓய்வுபெற்றபின் அவர்களின் நீண்ட அனுபவம் மற்றும் தேசாபிமானம் இவற்றை கருத்தில் கொண்டு மகா முக்கிய பணியில் அமர்த்துவார்கள்

அவர்கள் நாடும் வலுவாகும், பாதுகாப்பு பலமாகும், எந்த பிரிவினை குழப்பமும் எடுபடாது

ஆக காஷ்மீரிலும் வடகிழக்கிலும் அமைதியினை நிலை நாட்டிவிட்டு 70 ஆண்டுகால ஊழல், பிரிவினை என மகா குழப்பங்களை செய்யும் திராவிட கோஷ்டி பக்கம் வந்துவிட்டது மோடி அரசு

திராவிடம் எனும் புற்றில் எந்தெந்த பாம்பு உண்டு, கம்யூனிஸ்ட், தமிழ் தேசியம், இன்னும் தமிழ் உணர்வு எனும் பெயரில் எத்தனை கொடுந்தேளும் பூரானும் உண்டு என்பதெல்லாம் எல்லோரையும் போல அவர்களுக்கு தெரியும்

அந்த புற்றை கலைத்து அங்கே பூந்தோட்டம் அமைக்க ஒரு உறுதியான தலைவனை அனுப்புகின்றது டெல்லி

அந்த தேசாபிமானியினை இருகரம் கூப்பி வணங்கி வரவேற்கின்றது தமிழகம்

இனி மெல்ல செழிக்கும் தமிழகம், வினை தீர்க்கும் விநாயகனின் நாளில் தமிழக கொடும் வினைகளெல்லாம் தீரட்டும்

ஆக ரஜினி என்பவர் அரசியலுக்கு “சிங்கம் ஒன்று புறப்பட்டதே” என வருவார், பாஜக அதை செய்யும் என எதிர்பார்த்து அது பொய்த்த நிலையில் திரையுலக டம்மி சிங்கமெல்லாம் வேண்டாம் ஒரிஜினல் சிங்கத்தையே களமிறக்குவோம் என இறக்கிவிட்டது டெல்லி

சிங்கம் கர்ஜனையோடு சென்னை நோக்கி வருகின்றது, அது வருகின்றது என்ற கர்ஜனையிலே கலங்கி நிற்கின்றது தமிழக நரிகூட்டம், அந்த கருடன் இறக்கை விரிக்க அலறி திகைக்கின்றது தீராவிடம் கொண்ட திராவிட நாக கூட்டம்.

  • ஸ்டான்லி ராஜன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories