
கனேடியப் பிரச்சினை நாளுக்கு நாள் சூடுபிடித்துக் கொண்டே போகிறது. காலிஸ்தான் தீவிரவாதிகள் இந்துக்களைக் கொலை செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலைமை அங்கே உருவாகியிருக்கிறது. இந்திய அரசாங்கம் கனடாவில் குடியிருக்கும் தனது குடிமக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறது.
கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என இரண்டு நாடுகளும் தாக்கிக் கொள்வதால் நிலைமை அத்தனை சீக்கிரம் சரியாவதற்கான முகாந்திரம் தெரியவில்லை. மறு அறிவுப்பு வரும்வரையில் கனடா குடிமக்களுக்கு இந்திய விசா கிடைப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு நாட்டுத் தூதரக முக்கியஸ்தர்களை பரஸ்பரம் விரட்டியடித்திருக்கிறார்கள் என நிலைம கோலாகலமாகப் போய்க் கொண்டிருக்கிறது.
இந்த நிலைமைக்கு அடிப்படைக் காரணம் ஜஸ்டின் ட்ரூடோ என்கிற மாங்காய் மடையன்தான். அவனுக்குப் பின்னனியில் காலிஸ்தானிய தீவிரவாதிகளும், பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ. போன்ற அமைப்புகளும் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. சீக்கியர்களின் கட்சி ஆதரவை விலக்கினால் ஜஸ்டின் ட்ரூடோவின் மைனாரிடி அரசு கவிழ்ந்துவிடும் என்கிற நிலைமையில் காலிஸ்தானிய தீவிரவாதிகள் ட்ரூடோவின் கழுத்தைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். இந்தியாவின் இந்தக் கடுமையான எதிர்வினையை எதிர்பார்த்திராத ட்ரூடோ கொஞ்சம் ஆடிப்போயிருக்கிறார். இன்றைய இந்தியா பழைய இந்தியா இல்லை என்பதால் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற அவரது நட்பு நாடுகளும் வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள்.
1970-களில் கனடாவில் குடியேறிய சீக்கியர்கள் தங்களின் கடுமையான உழைப்பினால் மண்ணைப் பொன்னாக்கினார்கள். கோதுமையையும், பருப்பு வகைகளையும் ஏராளமாக விளைவித்து கனடாவின் பொருளாதாரத்தையும் உயர்த்தினார்கள். அதில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு தொழில்களையும், வியாபாரங்களையும் துவங்கினார்கள். இதன் காரணமாக இன்றைய கனேடிய சீக்கியர்கள் பெரும் செல்வந்தர்கள். இவர்களைக் கண்ட சாதாரண பஞ்சாபின் சீக்கியர்களுக்கு எப்பாடுபட்டாவது கனடாவில் சென்று குடியேறுவது என்பது ஒரு இலட்சியமானது. இருந்தாலும் விசா வாங்குவது அத்தனை எளிதாக இருந்துவிடவில்லை.
அதிர்ஷ்டவசமாக அல்லது துரதிருஷ்டவசமாக இந்திராகாந்தியின் மரணத்திற்குப் பின்னர் இந்தியாவெங்கும் பல ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். இதனைக் காரணம் காட்டி பல சீக்கியர்கள் பிரிட்டன், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு அகதிகளாகப் போனார்கள். பின்னர் நிலைமை இந்தியாவில் சீரடைந்த பிறகும் சீக்கியர்கள் இன்றைக்கும் அகதி என்கிற போர்வையில் மேற்கத்திய நாடுகளுக்குள் நுழைகிறார்கள். இந்தியாவின் பஞ்சாபில் அமைதி நிலவினால் அவர்களால் அகதிகளாகச் செல்லமுடியாது என்பதால் பஞ்சாபில் தீவிரவாதத்தை மீண்டும் துவக்கியே ஆகவேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு.
எப்படியாவது ஒரு கலவரத்தை சீக்கியர்களுக்கு எதிராக உருவாக்கும் எண்ணத்துடன் டெல்லியில் விவசாய மசோதாவுக்கு எதிராகப் பெரும் பணம் செலவழித்தார்கள் காலிஸ்தானிய தீவிரவாதிகள். ஆனால் அதனை மோடி மிக அழகாகச் சமாளித்தார். அங்கு நடந்த கலவரங்களில் ஒரே ஒரு சீக்கியன் கொல்லப்பட்டிருந்தாலும் உலகமெங்கும் காலிஸ்தானிகளுக்கு ஆதரவு பெருகியிருக்கும். மோடி அதனைத் தவிர்த்தார். விவசாய மசோதாவைக் கொண்டுவராமல் தவிர்த்தார். இதன் காரணமாக அவர்கள் செலவழித்த பணம் அத்தனையும் வீணானது.
அடிப்படையில் சீக்கிய மதமே ஹிந்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பது மறுக்கவியலாத உண்மை. இன்றைக்கும் ஹிந்துக் குடும்பத்தில் பிறந்த மூத்தமகனை சீக்கியனாக்குவதனை பெருமையாகக் கருதும் பஞ்சாபி ஹிந்துக் குடும்பங்கள் இருக்கின்றன. சீக்கிய புனித நூலான குரு கிரந்த் சாஹிபில் ராமனும், கிருஷ்ணனும் மூன்றாயிரம் முறைகள் குறிப்பிடப்படுகிறார்கள். ஆனால் சீக்கியர்களை ஹிந்துக்களிடமிருந்து பிரிப்பதில் மேற்கத்திய நாடுகள் வெற்றியடைந்திருக்கின்றன.
பிரிட்டிஷ்காரர்கள் குரு கிரந்தத்தை மாற்றி எழுதினார்கள். எங்கெல்லாம் ராமனும், கிருஷ்ணனும் குறிப்பிடப்படுகிறார்களோ அதனை நீக்கிவிட்டு அந்த இடத்தில் “God” என மாற்றி எழுதினார்கள். ஹிந்துவும், சீக்கியனும் வெவ்வேறானவர்கள் எனத் தொடர்ச்சியான மூளைச்சலவைகள் நடந்தன. இன்றைக்குப் பல சீக்கியர்கள் புதிய குரு கிரந்தத்தை நம்புகிறவர்களாக மாறிவிட்டார்கள். ஒரு சீக்கியனுக்கு பிரிட்டன் அல்லது கனேடிய விசா தேவையென்றால் அவன் கிறிஸ்தவனாக மதம் மாறினால் போதும் என்கிற நிலைமையை உருவாக்கினார்கள். இதன் விளைவாக பஞ்சாபின் சீக்கியர்கள் பலர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டார்கள். இன்றைய பஞ்சாபில் ஏறக்குறைய 20 சதவீதம் பேர்கள் கிறிஸ்தவர்கள்.
கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாலும் ஊரை ஏமாற்றுவதற்காக இன்றைக்கும் தலைப்பாகை அணிவதனை அவர்கள் நிறுத்தவில்லை. அந்த மதம்மாறிய கிறிஸ்தவர்களே பெரும்பாலான காலிஸ்தானிய ஆதரவாளர்கள். எல்லைக்கு இரண்டுபக்கமும் இருக்கிற பஞ்சாபிகளை பாகிஸ்தானி ஐ.எஸ்.ஐ. மிக எளிதாக மூளைச்சலவை செய்து அவர்களை ஹிந்துக்களுக்கு எதிராக மாற்றி வைத்திருக்கிறார்கள். கனடாவில் ஏராளமான ரிடையர்ட் பாகிஸ்தானிய ஜெனரல்களும், ராணுவ முக்கியஸ்தர்களும் குடியேறி இருக்கிறார்கள். அவர்களும் இந்தப் பிரச்சினையைத் தூண்டுவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.
இன்றைய கனடாவில் ரவுடித்தனம் பண்ணுபவர்கள், போதை மருந்து கடத்துபவர்களில் பெரும்பாலோர் பாகிஸ்தானிகளும், காலிஸ்தானிகளும்தான். பெரும்பாலான சீக்கியர்கள் டிரக் ட்ரைவர்களாக வேலை செய்வதால் அந்தத் ட்ரக்குகள் மூலம் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு போதை மருந்துகளும், ஆட் கடத்தல்களும் நடக்கின்றன. அரசியல் ரீதியாக கனடாவில் காலிஸ்தானிகள் பலமுடன் இருப்பதால் கனேடிய அரசால் அவர்களை ஒன்று செய்ய இயல்வதில்லை.
கனடாவிலும் போதை மருந்துக் கலாச்சாரம் பெருமளவில் இருக்கிறது. எல்லாவிதமான போதை மருந்துகளையும் அங்கு தாரளமாக வாங்கலாம். டோரோண்ட்டோவின் வீதியோரங்களில் இந்த போதை மருந்து அடிமைகள் வீழ்ந்து கிடப்பதனை நானே கண்டிருக்கிறேன். எனக்குப் பெரும் அதிர்ச்சியளித்த விஷயம் அது.
கனடாவில் ஏறக்குறைய 8 இலட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். கடின உழைப்பாளிகளான அவர்கள் கனேடியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டால் கனேடியப் பொருளாதாரம் பெரும் அழிவுக்கு உள்ளாகும் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனென்றால் எங்கு சென்றாலும் இந்திய ஹிந்து அந்த நாட்டின் சட்டங்களை மதித்துக் கடினமாக உழைக்கக்கூடியவன். அவர்களின் பொருளாதார வளர்ச்சி நிச்சயமாகப் பலரின் கண்களை உறுத்துகிறது.
எந்த இந்திய ஹிந்துவும் அகதியாக கனடாவுக்குச் செல்லுவதில்லை. தனது தகுதி, திறமையின் அடிப்படையில், சரியான வழிகளில் விசா வாங்கி கனடாவுக்குச் செல்லுகிறான். வந்திறங்கிய நாள் முதல் உழைக்க ஆரம்பிக்கிறான். ஆனால் கனடாவிற்குள் அகதிகளாக வந்திறங்கும் சீக்கியர்கள், முஸ்லிம்கள் போன்றவர்களுக்கு ஏராளமான சலுகைகளும், இலவசங்களும் கிடைக்கின்றன. ஒருவன் அகதியாக கண்டாவில் வந்திறங்கினால் ஒரு வேலையும் செய்யாமல் ராஜ வாழ்க்கை வாழலாம் என்கிற கசப்பான உண்மையே அங்கு அகதிகளை சாரி, சாரியாக செல்லவைக்கிறது. அவர்களுக்கும் சேர்த்து ஹிந்துக்கள் உழைத்து வரி கொடுக்கிறார்கள். அவர்களை விரட்டியடித்தால் என்ன நடக்கும் என்பது ட்ரூடோவுக்கும் தெரியும்.
எது எப்படி இருந்தாலும் பாதிப்பு கனடாவுக்குத்தானே தவிர, இந்தியாவுக்கு அல்ல.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியா மாறிவிட்டது. இனி அதனுடன் விளையாடுவது நெருப்புடன் விளையாடுவது மாதிரிதான்.
- பி.எஸ். நரேந்திரன்
Sema kathai ???