
மாண்புமிகு நிதி அமைச்சர் Thangam Thenarasu அவர்களுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை நான் கேட்கிறேன்:
ஊழல்வாதிகள் பா.ஜ.க.வின் கூட்டணிக்கு வந்தபின்பு, #WashingMachine-இல் வெளுப்பது எப்படி?
நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்?
ஒன்றிய அமைச்சர்களே நம் குழந்தைகளை அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளைச் சொல்லி மட்டுப்படுத்துவது ஏன்?
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?
பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்காக, மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டை #SIR ஆதரிப்பது ஏன்?
இரும்பின் தொன்மை குறித்து அறிவியல்பூர்வமாகத் தமிழ்நாடு மெய்ப்பித்த அறிக்கையைக்கூட அங்கீகரிக்க மனம்வராதது ஏன்?
கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன்?
இதற்கெல்லாம் பதில் வருமா? இல்லை வழக்கம்போல, வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய்ப் பிரசாரத்தைத் தொடங்குவீர்களா?
- மு.க. ஸ்டாலின்
திமுக., அரசின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்தக் கேள்விக்கு சாமானியர்களால் சமூகவலைத்தளத்தில் முன்வைக்கப்படும் எதிர்வினை..!
- செந்தில் பாலாஜி மிகப்பெரிய ஊழல்வாதி, அவரை சிறையில் அடைக்காமல் ஓய மாட்டேன் என்று கரூரில் வைத்து சொன்னீர்கள். கடைசியில் அவர் உங்கள் கட்சிக்கு வந்தவுடன் அவரை அமைச்சராக்கினீர்கள், என்னும் நிலையில் செந்தில் பாலாஜியை எந்த கடை வாசலில் மிஷினில் போட்டு துவைத்து நல்லவராக மாற்றினீர்கள்?
- சேகர்பாபு அதிமுகவில் இருக்கும் போது வேட்டிய மடித்துக் கொண்டு உங்கள் அப்பாவை அடிக்க பாய்ந்தார். அவர் பெரிய ஊழல்வாதி, அவரை சிறையில் தள்ளாமல் இருக்க மாட்டேன் என்று சொன்னீர்கள். பிறகு அவர் உங்கள் கட்சிக்கு வந்தவுடன் அவரை அறநிலையத்துறை அமைச்சராக மாற்றி வைத்திருக்கிறீர்கள். எந்தக் கடை வாஷிங்மெஷினில் போட்டு அவர் மீது இருக்கும் அழுக்கை எல்லாம் நீக்கினீர்கள்?
- அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிமுகவில் இருக்கும் போது நிறைய ஊழல் செய்துவிட்டார் என்பதற்காக சிவகங்கை ஒரு கூட்டத்தில் அவரை சிறையில் தள்ளாமல் இருக்க மாட்டோம் என்று சொன்னீர்கள். இப்போது அவர் உங்கள் கட்சிக்கு வந்தவுடன் அவரை அமைச்சராகி அழகு பார்க்கிறீர்கள். அவரை எந்த வாஷிங் மெஷினில் போட்டு துவைத்தீர்கள் என்று சொல்ல முடியுமா?
- ஏமா வேலு, அதிமுகவில் இருக்கும் போது கான்ட்ராக்ட்டில் முறைகேடு செய்துவிட்டார். அவரை ஜெயிலில் அடைக்க போகிறோம் என்று மேடை தோறும் பேசி வந்தீர்கள். இப்போது அவர் உங்கள் கட்சிக்கு வந்தவுடன் அவரை அமைச்சர் ஆக்கி வைத்திருக்கிறீர்கள். அவரை எந்த வாஷிங் மெஷினில் போட்டு துவைத்து எடுத்தீர்கள் என்று கொஞ்சம் சொல்லுங்க?
- எஸ். ரகுபதி அதிமுகவில் இருக்கும்போது ஊழல் செய்து வருகிறார், இவரை வெற்றி பெற வைக்க கூடாது என்று மதுரையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினீர்கள். இப்போது அவரை அமைச்சராக்கி வைத்திருக்கிறீர்கள். அவரை எந்த லாண்டரியில் போட்டு வெளுத்து எடுத்தீர்கள்?
- முத்துசாமி அதிமுகவில் இருக்கும் போது வருமானத்திற்கு அதிகமாக சேர்த்துவிட்டார், ஊழல் செய்து கொண்டு வருகிறார். எனவே அவரை சிறையில் அடைக்காமல் விடமாட்டோம் என்று தொடர்ந்து பேசிக் கொண்டே வந்தீர்கள். இப்போது அவர் உங்கள் கட்சிக்கு வந்தவுடன் அவரை டாஸ்மார்க் அமைச்சர் ஆக்கி வைத்திருக்கிறீர்கள். அவரை எந்த துணிக்கடையில் போட்டு துவைத்து எடுத்தீர்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.
- அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் பகுதியில் உள்ள கான்ட்ராக்டர்களிடம் பணம் வாங்கி மிகப்பெரிய ஊழல் செய்கிறார் என்று உங்கள் ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் மூலம் வழக்கு பதிவு செய்தீர்கள். இப்போது அவர் உங்கள் கட்சிக்கு வந்தவுடன் புனிதராகும் அளவிற்கு எந்த லாண்டரியில் போட்டு துவைத்தீர்கள்?
- கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அதிமுக அமைச்சராக இருந்தபோது மிகப்பெரிய ஊழல் செய்துவிட்டார். அவரை தோல்வி அடைய செய்யுங்கள் என்று கோவில்பட்டியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் நீங்கள் பேசினீர்கள். இப்போது அவர் உங்கள் கட்சிக்கு வந்தவுடன் அவரை அமைச்சர் ஆக்கி வைத்திருக்கிறீர்கள். அவரை எந்த சலவைக்காரனிடம் போட்டு துவைத்து வாங்கினீர்கள் என்று கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம்.
- ஜெகத்ரட்சகர் அதிமுகவில் இருக்கும் போது ஊழல் செய்து மதுபான ஆலைகள் திறந்து இருக்கிறார் என்று குற்றம் சாட்டினீர்கள். இப்போது அவர் உங்கள் கட்சிக்கு வந்தவுடன் அவரை அமைச்சராகியதும் இல்லாமல் அவருடைய மதுபான ஆலைலிருந்து அரசு நிறுவனத்திற்கு தொடர்ந்து மதுபானங்கள் வாங்கி இருக்கிறீர்கள். என்னும் நிலையில் அவரை எந்த துணி துவைப்பு கடையில் போட்டு துவைத்து எடுத்தீர்கள் என்று கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம்.
செல்வகணபதி, அப்பாவு, தங்க தமிழ்ச்செல்வன், மைத்ரேயன், அன்வர் ராஜா என்று நீளமான பட்டியல் இருக்கிறது. அவர்களையெல்லாம் எந்த வாஷிங் மெஷினில் போட்டு எடுத்தீர்கள் என்பதையும் கொஞ்சம் சொல்லுங்க சார்.
இப்படி பாஜகவை விட பெரிய வாஷிங் மெஷினாக நீங்கள் தான் இருக்கிறீர்கள். ஒரு பொறுப்பான அரசியல் தலைவராக, கடந்த கால பேச்சுகள் மற்றும் செயல்களில் உள்ள முரண்பாடுகளை சீராய்த்து பார்க்க வேண்டும். ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்களை பதவியில் வைப்பது அரசின் நம்பிக்கையை குலைக்கும். நல்ல ஆட்சிக்காக நேர்மையும் நியாயமும் வழிகாட்டியாக இருக்க வேண்டும். இனிவரும் ஆறு மாதங்களிலாவது இப்படி ஊழல் கறை படிந்த இந்த பத்துக்கு மேற்பட்ட அமைச்சர்களை நீக்கிவிட்டு ஊழல் செய்யாத நல்ல அரசியல்வாதிகளை வைத்து அரசியல் செய்யுங்கள் அல்லது ஆட்சி செய்யுங்கள்..





