23/10/2019 9:28 PM
அரசியல் இவர்கள் மோடியைப் பாராட்டுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை!

இவர்கள் மோடியைப் பாராட்டுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை!

-

- Advertisment -
- Advertisement -

பாஜக மீட்டெடுத்த ஜல்லிக்கட்டை தங்களின் வெற்றியாக கொண்டாடியவர்கள்,

நீட்டுக்கு தமிழகம் கேட்டு கொண்டபடி ஒரு வருடம் விலக்கு அளித்து, இந்தியாவிலேயே அதிக அளவு தமிழர்கள் மருத்துவ படிப்பை படிக்க உதவிய, பாஜகவை சாடியவர்கள்,

பல வருடங்களாக தி மு கவும், காங்கிரஸும் இழுத்தடித்த காவேரி பிரச்சினையை தீர்த்து வைத்த பாஜகவை விமர்சனம் செய்தவர்கள்,

ஜி எஸ் டி மூலம் தமிழக அரசின் வருவாயை அதிகரிக்க செய்த பாஜகவை தமிழகத்திற்கு எதிராக செயல்படுவதாக சொன்னவர்கள்,

ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்ததற்கு துணை நின்ற காங்கிரசோடு கை கோர்த்து செயல்படும் தி மு க விற்கு முட்டு கொடுத்து, பாஜகவை இலங்கை தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று அவதூறு செய்யும் போலி இனமான காவலர்கள்,

மத்திய அரசின் திட்டங்களில் ஊழல் இல்லாத செயல்பாடுகளை கொண்டு வந்த பாஜகவின் மீது பல்வேறு போலி குற்றச்சாட்டுக்களை சொல்லி ஊழலில் திளைக்க துடிக்கும் அற்ப பதர்களை ஆதரிக்கும் நடுநிலையாளர்கள்,

பண மதிப்பிழப்பு நீக்கும் நடவடிக்கையால் வீக்கமாகிக்கொண்டிருந்த நிலங்களின் மதிப்பை சாமான்யர்களும் அடிப்படை விலை கொடுத்து அடையும் படி செய்த பாஜகவை நோக்கி வன்மத்தோடு பொங்கி எழுந்த இடைத்தரகர்கள் மற்றும் கொள்ளைக் கூட்டத்தினர்கள்,

பருவ நிலை மாற்றத்தை சமாளிக்க யோகா மற்றும் கால்நடை பராமரிப்பு திருத்த சட்டத்தை கொண்டு வந்த பாஜக அரசின் நடவடிக்கைகளை மதம் சார்ந்தவைகளாக சித்தரித்து பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை மக்கள் எதிர்கொள்ளா வண்ணம் சீர்கேடுகளை விளைவித்த முற்போக்குகள்,

விவசாயிகளுக்காக பாஜக அரசு கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை திட்டமிட்ட ரீதியில் அவதூறு பிரச்சாரம் செய்து விவசாயிகளின் வாழ்வில் மண்ணை அள்ளிப்போட முயன்ற போலி விவசாயிகள்,

சீன பொருட்களையே வாங்கவேண்டும் என்ற எண்ணத்தோடு தொழிலாளர்களை தூண்டி விட்டு தொடர்ந்து 70 ஆண்டுகளாக உற்பத்தி துறையை முடக்கி கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகள்,

சிறுபான்மை சமுதாயத்தினருக்காக இருப்பதாக சொல்லிக்கொண்டு அவர்களை 70 ஆண்டுகளாக கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களாகவே வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியினர்,

பெரும்பான்மை ஹிந்துக்களை திருடர்கள் என்றும், ஹிந்து மதத்தை வேரறுப்போம் என்று சொல்லும் திமுகவினர்,

சாதி வெறிபிடித்த கட்சியை நடத்தி வன்முறைக்கு வழிவகுக்கும் விடுதலை சிறுத்தைகள்,

இவர்கள், அபிநந்தனை மீட்டெடுத்த மாவீரன் நரேந்திர மோடியை பாராட்டுவார்கள் என்று நாம் எதிர்பார்க்கவுமில்லை.

இம்ரான்கானை புகழ்ந்து தள்ளுவார்கள் என்பதில் வியப்புமில்லை.

இவர்கள் தமிழின, தேச விரோதிகள் என்பதிலும் எந்த சந்தேகமுமில்லை.

நம் தமிழ் இளைஞன் அபிநந்தனை மீட்டெடுத்த நரேந்திரமோடியின் கொற்றம் வாழ்க. புகழ் ஓங்குக.

வீரனுக்கு பயந்து விமர்சனம் செய்த கோழைகளை புறந்தள்ளி, மக்களை அடையாளம் காணச்செய்வோம்.

நாராயணன் திருப்பதி.

Sponsors

- Advertisement -
- Donate via PayTM -
Tamil Dhinasari News..! We are in the path of protecting our Hindu dharma! Please consider supporting us to run this Tamil web portal continuously.
-Advertisement-

சினிமா:

-Advertisement-
-Advertisement-
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

%d bloggers like this: