ஒப்போ ரெனோ 8, ஒப்போ ரெனோ 8 ப்ரோ, ஒப்போ ரெனோ 8 ப்ரோ பிளஸ்: சிறப்பம்சங்கள்..!

Published:

Oppo Renault 8 Oppo Renault 8 Pro and Oppo Renault 8 Pro Plus - 2026

ஒப்போ ரெனோ 8 சீரிஸ் இந்தியாவில் வெளியிடப்படும் தேதி வரும் நாட்களில் அறிமுகம் செய்யப்படும். ஒப்போ ரெனோ 8 ப்ரோ ப்ளஸ் இன்று அறிமுகம் செய்யப்பட்ட மூன்றில் மிகவும் ப்ரீமியமான ஸ்மார்ட்போனாகும்

ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. ரெனோ 8 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போனானது 50 எம்பி டிரிபிள் கேமரா அமைப்புடன் இருக்கிறது.

ஒப்போ ரெனோ 8 சீரிஸ் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிறுவனம் ரெனோ 8 தொடரில் மூன்று ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒப்போ தொடரில் ஒப்போ ரெனோ ப்ரோ+, ரெனோ 8 ப்ரோ மற்றும் ரெனோ 8 உள்ளிட்டவை அடங்கும். இந்த மூன்று சாதனங்களும் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனோ 8 ப்ரோ சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 எஸ்ஓசி அம்சத்தைக் கொண்டிருக்கிறது.

ஒப்போ ரெனோ 8 ப்ரோ+ ஸ்மார்ட்போனானது மிகவும் விலை உயர்ந்த சாதனமாக இருக்கிறது. இந்த சாதனம் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 மேக்ஸ் எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

இந்த சாதனமானது 6.7 இன்ட் ஓஎல்இடி டிஸ்ப்ளே முழு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. சாதனத்தின் பின்புற டிரிபிள் கேமரா அமைப்புடன் வருகிறது.

இது 50 எம்பி பிரதான கேமரா, 8 எம்பி அல்ட்ராவைட் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வசதியோடு வருகிறது. செல்பி மற்றும் ஆதரவுக்கு என 32 எம்பி முன்புற கேமரா சென்சார் இருக்கிறது.

ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 எஸ்ஓசி வசதியைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் 6.62 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவோடு வருகிறது.

பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பை இது கொண்டிருக்கிறது. இந்த சாதனத்தில் 50 எம்பி பிரதான கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார் உடன் வருகிறது. செல்பி மற்றும் ஆதரவுக்கு என 32 எம்பி முன்புற கேமரா இருக்கிறது.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ரெனோ 8 ஸ்மார்ட்போனானது 6.43 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் மீடியாடெக் டைமன்சிட்டி 1300 எஸ்ஓசி ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ஸ்மார்ட்போனில் 50 எம்பி பிரதான கேமரா, இரட்டை 2 எம்பி சென்சார்கள் உடன் வருகிறது. செல்பி மற்றும் ஆதரவுக்கு என 32 எம்பி முன்புற கேமரா ஆதரவு இருக்கிறது. மூன்று ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் 4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு மற்றும் 80 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 12.0 மூலம் இயக்கப்படுகிறது.

ஒப்போ ரெனோ 8 சாதனம் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.29,900 ஆகவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.32,500 ஆகவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.35,000 ஆகவும் இருக்கிறது.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

ரெனோ 8 ப்ரோ மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதன் விலை இந்திய மதிப்புப்படி ரூ.35,000, ரூ.37,300 மற்றும் ரூ.40,800 ஆகவும் இருக்கிறது.

ரெனோ 8 ப்ரோ+ இரண்டு சேமிப்பு விருப்பங்களில் வருகிறது. இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.43,200 ஆகவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.46,700 ஆகவும் இருக்கிறது. விலை மதிப்பு அனைத்தும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட விலையுடன் இந்திய விலையின் தோராயமான மதிப்பாகும்.

Related articles

Recent articles

spot_img