தொடர்ந்து 7 மணி நேர திருக்குறள் சொற்பொழிவு சாதனை
தொடர்ந்து 7 மணி நேரம் திருக்குறள் சொற்பொழிவு நிகழ்த்தி கலைமகள் இதழாசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் ஆக்கபூர்வமான கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார் என நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூர் கோகலே சாஸ்திரி அரங்கில் தொடர்ந்து...
செங்கோட்டை: பாகப் பிரிவினையின் சோக வரலாறு!
2016 நவம்பர் 1:
செங்கோட்டை தாலுகாவின் ஒரு பாதி, தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைந்ததன் 60ஆம் ஆண்டு!
1956ல் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, மாநிலச் சீரமைப்பு நடைபெற்ற போது,
தமிழ்நாட்டின், தமிழ் மண்ணின், தமிழ் மொழியின்,...
செக்யூலரிஸமும் செருப்படியும்!
இந்த நாட்டுல கடவுள் மறுப்புக் கொள்கையும் இருக்கு... அதுக்கு பேர் செக்யுலரிசம்...
அப்டின்னு கினாதானாகானா சொல்லுறாரு... அதுக்கு அவ்ளோ வேகமா எஸ் எஸ்..னு சத்தமா சொல்லுது பொண்ணு...! ஏன்டியம்மா நீ படிச்ச ஊடக தர்மம்...
ஆன்மாவில் இருந்து தோன்றுவது இசை!
22.11.2006ல் தென்காசி - சுரண்டையை அடுத்த வீரகேரளம்புதூரில் இருந்த இரா.உ. விநாயகம் பிள்ளை என்பார் எழுதிய கடிதம்.
பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை தாத்தாவின் ஊரான வீ.கே.புதூருக்குச் சென்றிருந்தபோது, இந்த உ.விநாயகம் பிள்ளைவாளைச்...
கிர் ரென்றே சுற்றுகிறது!
அண்ணா... அண்ணா...
ஒத்த வயதென்றாலும்
பெயரின் முதற்பாதி முன்னே தள்ள
அண்ணா என்றே அழைப்பேன்...
கூடவே
மல...டாஆ... அண்ணா ... மல...
கேலிக்காய்ச் சொல்வேனோ
ஊக்கத்தின் உந்துதலாய் உசுப்பேற்றிச் சொல்வேனோ...
புன்னகை மாறாது கை கொடுப்பாய்
பதவிகளின் தன்மை பக்கத்தில் வரவிடாத
முதற்கட்டத்தில்...
வலியவே வந்து
தோளில் கைபோட்டுச் சிரிப்பேன்...
குழந்தைத்தனமாய்...
‘தமிழ் ஐகான்ஸ்’ கேட்லாக் வெளியீட்டுவிழா !
மறைந்த இசைமேதை எம் எஸ் என்கிற எம் எஸ்.சுப்புலட்சுமி பற்றிய ஆர்ட் கேலரியின் நிறைவு விழா இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஜெயந்தி கண்ணப்பன் மற்றும் வருமான வரித்துறை ஆணையர் டாக்டர் சீனிவாசராவ். ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு'கேட் லாக்' கை வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் திருமதி ஜெயந்தி கண்ணப்பன் பேசும் போது,
"நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். இங்கே எம்.எஸ் அவர்கள் பற்றிய ஓவியக் கண்காட்சியைச் சுற்றிப் பார்த்தேன். மிக அருமையாக இருந்தது. எம்.எஸ். அம்மா எனறாலேஅவரது அழகிய தோற்றமும், மூக்கின் இரு பக்கமும் ஜொலிக்கும் வைரமுக்குத்தியும் ,காதுகளில் மின்னும் வைரத்தோடும் , நெற்றியில் பளிச்சிடும் குங்குமப் பொட்டும் மனதில் வரும். அவரது் தோற்றமேஇந்தியப் பெண்ணின் அடையாளமாக இருந்தது.
அவர் சினிமாவிலும் பெரிய வெற்றி பெற்று இசையுலகிற்காகத் தன்னை அர்ப்பணித்துப் புகழ் பெற்று விளங்கினார். அவருக்குக் கிடைக்காத விருதுகளும் இல்லை . பெருமைகளும் இல்லை எனலாம். .அப்படிப்பட்ட எம், எஸ். அம்மா அவர்களின் பலவித முக பாவங்கள் கொண்ட ஓவியங்கள், பலவித தோற்றத்திலான ஓவியங்கள் என அரிய முயற்சியாக இருந்தது.
அது மட்டுமல்ல எம்.எஸ். பற்றிய அரிய புகைப்படங்களின் கண்காட்சியும் இருந்தது. இம் முயற்சியில் வெங்கடேசன், உதயசங்கர் என இரு இளைஞ ர்கள் ஈடுபட்டு செய்து இருப்பது பாராட்டுக்குரியது. இதைநார்வே, ஸ்வீடன், பிரான்ஸ் போன்ற ஏழு நாடுகளிலும் நடத்த இருக்கிறார்கள்.
நம் நாட்டு தொன்மையை கலைப்பெருமையை நாடு கடந்து கொண்டு சேர்க்கும் இம்முயற்சி பாராட்டுக்குரியது. "என்றார்.
வருமான வரித்துறை ஆணையாளர் டாக்டர் சீனிவாசராவ் பேசும் போது,
'"நான் ஆந்திராக்காரர் . இன்று இங்கே கூடியிருப்பவர்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். உண்மையிலே இது ஒரு மிராக்கள் தான் வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் நாம் இங்கே ஒன்றாக இருப்பதேநம்மை இணைத்து இருப்பதே இசையின் எம்.எஸ்ஸின் தெய்வீக சக்தி என்றே சொல்ல வேண்டும். இங்கே கண்காட்சியை பார்த்தேன். பாவங்களில் நவரசங்கள்தான் இருக்கிறது என்பார்கள் ஆனால் இங்குவரையப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டு இருக்கிற ஓவியங்களில் நவரசங்களைத் தாண்டிய பாவங்களைப் பார்த்தேன்.
இந்த அவசர உலகத்தில் கலையை ரசிக்கவும் கலைஞர்களை மரியாதை செய்யவும் யாருக்கும் தோன்றுவதில்லை. அதற்கு நேரமில்லை. இந்தக் காலத்தில் இம் முயற்சியில் ஈடுபட்டுள்ள வெங்கடேசன்,உதயசங்கர் இருவரையும் பாராட்டுகிறேன். இது உலகின் பிற நாடுகளுக்கும் செல்ல இருப்பது மகிழ்ச்சிக்குரியது " என்றார்.
நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கடேசன் பேசும் போது ,
" தமிழ்ச் சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த ஆண்டு எம் எஸ் அம்மாவின் நூற்றாண்டும் கூட.
இதையொட்டி ,'தமிழ் ஐகான்ஸ்' கேட்லாக் வெளியீட்டுவிழா : படங்கள்: கேலரி! என்கிற பெயரில் தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற சிறந்த ஆளுமைகளை மக்கள் முன் கொண்டு சேர்க்கும் பணியை சாய்மீராமீடியாஸ் கொண்டு செல்ல விருக்கிறது. முதலில் எம் எஸ் அம்மாவிடமிருந்து தொடங்குகிறோம். இந்த ஆரட் கேலரி யை நிறைய பேர் பார்த்துப் பாராட்டினார்கள். இம்முயற்சியில் என்னுடன் இணைந்துகொண்டிருக்கிறார் உதயசங்கர்.எங்கள் பணி தொடரும்'' என்றார்.
இந்நிகழ்ச்சியில் 'மியூசி மியூசிக்கல்' ஹரிச்சரன்தாஸ் உள்ளிட்ட இசை ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நடிகை லிஸி லட்சுமி விவாகரத்து
திருமண பந்தம் என்பது, நம் சமுதாயத்தில் சில பத்து வருடங்களுக்கு முன்னர் வரையிலான மனநுட்ப உலகில் எத்தகையதாக இருந்தது! ; இன்றைய தொழில்நுட்ப உலகில் எவ்வாறு இருக்கிறது என்பதை யோசித்துப் பார்க்கும் போது......
எங்கள் ஊர் சங்கீதப் போட்டி
எங்கள் ஊர் சங்கீதப் போட்டி
-கல்கி
"கேட்டீரா சங்கதியை'' என்று கேட்டுக் கொண்டே கபாலி சுந்தரமையர் விஜயம் செய்தார்.
அவர் விஜயமாகும் விஷயத்தை ஜவ்வாது "நெடி' நாழிகைக்கு முன்னமே தெரிவித்துவிட்டது. அந்த நெடியினால் நான் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும்போது,...
நட்பு- கொள்ளலும் விடுத்தலும்!
சில நேரங்களில் படி படி எனப் படித்தால், பிடி பிடி எனப் பிடிக்கும்படியாய் ஆகியிருக்கிறது...
'உடும்புப் பிடி’ ... 'சிக்’ எனப் பற்றுதல் என்று ஒரு சொலவடை நம் வழக்கில் உண்டு. அதாவது ஒன்றைப்...
விமர்சனக் கலைக்கு வளம் சேர்த்த க.நா.சுப்ரமணியம்
தமிழின் இலக்கிய வளமையும் தொன்மைச் சிறப்பையும் நமக்குள்ளே வைத்திருத்தல் தகாது; உலக மொழிகளில் எடுத்துச் சென்றால் அதன் பெருமை உயரும் என்றெண்ணியவர் க.நா.சு. அதனால் தமிழின் தலைசிறந்த படைப்புகளை ஆங்கிலத்தில் கொண்டுசெல்ல மொழிபெயர்ப்புக்...