To Read it in other Indian languages…

Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் அறப்பளீஸ்வரர் சதகம்: எந்தெந்த கிழமைகளில் ஆயில் பாத்.. பரிகாரம்..!

அறப்பளீஸ்வரர் சதகம்: எந்தெந்த கிழமைகளில் ஆயில் பாத்.. பரிகாரம்..!

முழுக்குநாள்

வரும் ஆதி வாரம் தலைக் கெண்ணெய் ஆகாது
வடிவமிகும் அழகு போகும்;
வளர்திங் ளுக்கதிக பொருள்சேரும்; அங்கார
வாரம் தனக்கி டர்வரும்
திருமேவு புதனுக்கு மிகுபுத்தி வந்திடும்;
செம்பொனுக் குயர் அறிவுபோம்;
தேடிய பொருட்சேதம் ஆம்வெள்ளி; சனியெண்ணெய்
செல்வம்உண் டாயு ளுண்டாம்;
பரிகாரம் உளதாதி வாரம் தனக்கலரி;
பௌமனுக் கான செழுமண்
பச்சறுகு பொன்னவற் காம்; எருத் தூளொளிப்
பார்க்கவற் காகும் எனவே;
அரிதா அறிந்தபேர் எண்ணெய்சேர்த் தேமுழுக்
காடுவார்; அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

  அருமை  தேவனே!  வருகின்ற ஞாயிற்றுக்கிழமையன்று தலைக்கு

எண்ணெய் கூடாது, (அவ்வாறு முழுகினால்) உருவத்தில் மிகுந்து அழகு நீங்கும், வளர்ந்துவரும் திங்கட்கிழமைகளில் (முழுகினால்) மிகுந்த
பொருள் கிடைக்கும்,
செவ்வாய்க்கிழமைகளில் (முழுகினால்) துன்பம் உண்டாகும், அழகு மிகுந்த புதன்கிழமைகளில்
(முழுகினால்) சிறந்த அறிவு வரும்,
நல்ல வியாழக்கிழமைகளில் (முழுகினால்) சிறந்த அறிவு கெடும், வெள்ளிக்கிழமைகளில் முழுகினால்) சேர்த்துவைத்த பொருள் அழியும், சனிக்கிழமைகளில் எண்ணெய்
(தேய்த்து முழுகினால்) செல்வமும் ஆயுள் வளர்ச்சியும் உண்டாகும்,
(தகாத கிழமைகளில் முழுக நேர்ந்தால்) மாற்று உண்டு,
(அந்த மாற்று,) முதல் வாரமான
ஞாயிற்றுக்கிழமையில் அலரிமலராம்,
செவ்வாய்க்கு நல்ல மண் ஆகும்,
வியாழனுக்குப் பசிய அறுகம்புல் ஆகும், ஒளியுடைய வெள்ளிக்கு எருப்பொடி ஆகும். அருமையாக
உணர்ந்தவர்கள் எண்ணெயுடன் (இவற்றைச்) சேர்த்து முழுகுவர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 5 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.