சீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப் படுத்தும் இயக்குனர்!

கிசுகிசு சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
Actor Arjman Photos 1 - 2026

சாருஹாசன், நடிகை கீர்த்தி சுரேஷ் பாட்டி சரோஜா,ஜனகராஜ் நடித்த தாதா 87 வெற்றிப்பட இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜியின் அடுத்த படமாக நடிகர் அம்சவர்தன் தயாரித்து நடிக்கும் பீட்ரூ முடிவடையும் நிலையில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தற்போது பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற நகைச்சுவை திரில்லர் படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா, ஜூலி மற்றும் மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  மேலும் இப்படத்தில் சீயான் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். 

இது குறித்து இயக்குனர் கூறுகையில்,

“எனக்கு  பிஆர்ஓ நிகில் முருகன் அர்ஜூமனை  அறிமுகம் செய்தார். சீயான் விக்ரமின் தங்கை மகனான அர்ஜூமன் ஒரு ஆர்வமுள்ள நடிகர். சினிமாவில் நடிக்க நடிப்பு,நடனம்,சண்டை ஆகியவற்றை முறைப்படி கற்றுதேர்ந்துள்ளார் என்பதை அறிந்தேன். மேலும் அவரது தோற்றத்தை, குறிப்பாக அவரது சிகை அலங்காரத்தை நான் கண்டேன். இப்படத்தில் நான் நினைத்த  கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பதாக தோன்றியதால் அவரை கதையின் நாயகனாக அறிமுகப்படுத்துகிறேன்” என்கிறார் படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி முதல் அர்ஜூமன்,ஐஸ்வர்யா தத்தா மற்றும் மொட்ட ராஜேந்திரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் திருச்சி மற்றும் கோவாவில் படமாக்கப்பட உள்ளது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.