மாஸ்க் அணிய மறுத்த சிறுவன்! விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட தாயும், மகனும்!

Published:

Screenshot_2020_0815_124257

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவன் முகக்கவசம் அணிய மறுத்ததால் விமானத்திலிருந்து இறக்கி விடப் பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவில் டெக்சாஸ் விமான நிலையத்திலிருந்து பயணிகளுடன் சில தினங்களுக்கு முன்பு விமானம் ஒன்று புறப்பட்டு உள்ளது. அந்த விமானத்தில் அனைவரும் முகக்கவசம் அணிவதற்கு அறிவுறுத்தப்பட்டனர் ஆனால் விமானத்தில் பயணம் செய்த அலிசா என்ற பெண்ணின் மூன்று வயது மகன் மற்றும் முகக்கவசம் அணிவதற்கு மறுப்பு தெரிவித்து அடம்பிடித்தான். அவனது முகத்தில் மாஸ்க் போட முயற்சித்தும் கத்தி கூச்சலிட்டான்.

அதை வைத்து அவன் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவன் என்பது அனைவருக்கும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு அலிசா மற்றும் அவரது 3 வயது மகன் இருவரும் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “எனது மகன் ஆட்டிஸம் பாதிக்கப்பட்டவன். அவனுக்கு முகத்தை தொடுவது சிறிதும் பிடிக்காது. இது குறித்த மருத்துவ அறிக்கையை விமான ஊழியர்களிடம் காண்பித்தும் அவர்கள் அதனை பொருட்படுத்தவில்லை.

மாஸ்க் அணிவது கட்டாயம் தான் ஆனால் இதுபோன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு சற்று விலக்கு அளிக்கப்பட வேண்டியது அவசியம் என கூறியுள்ளார். இது குறித்து விமான நிறுவனம் விளக்கம் அளித்தபோது எந்த காரணமாக இருந்தாலும் பயணிகள் மாஸ்க் அணிய வில்லை என்றால் அவர்களை விமானத்தில் அழைத்து செல்ல முடியாது இது போன்ற இக்கட்டான சூழலில் அவர்கள் செலுத்திய பயணச்சீட்டு செலுத்திய பணத்தை திருப்பி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்போம் என தெரிவித்துள்ளது

ALSO READ:  செங்கோட்டையில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img