தென்காசியில்… ஆட்சியர் முதல் முறையாக கொடியேற்றி சுதந்திர தின விழா!

சற்றுமுன் நெல்லை
tenkasi-collector-flag
tenkasi-collector-flag

தென்காசி மாவட்டம் தொடங்கப்பட்டு முதல் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தேசீய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினர் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.

சுதந்திர தின விழாவில் அதிருப்தி அடைந்த முன்னாள் ராணுவத்தினர், சமூக ஆர்வலர்கள்

ஆண்டு தோறும் நடைபெறும் சுதந்திர தின விழாவில் திறமையாக பணியாற்றிய போலீசார், அரசு ஊழியர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர், சமூக ஆர்வலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி கெளரவிப்பார்.

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் அதிகாரிகளால் அழைத்து வரப்பட்ட கொரோனா காலங்களில் சமூக தொண்டாற்றிய சமூக ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரை நிகழ்ச்சியில் கெளரவிக்காமல் காலம் தாழ்த்தினர்.

இதில் முன்னாள் ராணுவத்தினர் வெளி நடப்பு செய்தனர். சமூக ஆர்வலர்கள் அதிருப்தியில் காத்து கிடந்தனர். அழைத்து வரப்பட்டு அவ மரியாதை செய்த மாவட்ட நிர்வாகத்தின் செயல் பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.