தென்காசி சுற்றுவட்டாரத்தில் லாபம்!

Published:

vijaysethupathi1 e1564390776897 - 2026

நடிகர் விஜய் சேதுபதியும் நடிகை ஸ்ருதி ஹாசனும் முதன் முறையாக இணைந்து நடிக்கும் லாபம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வித்தியாசமான இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

vijay sruthi - 2026

தமிழில் மாமனிதன், சிந்துபாத் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. 2015ஆம் ஆண்டில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் புறம்போக்கு என்ற பொதுவுடமை படத்தில் நடித்த விஜய் சேதுபதி இப்போது அவரது நான்காம் படமான லாபம் என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

labham 2 1 - 2026

அதோடு இந்தப் படத்தை விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ்.எண்டெர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரிக்கவிருப்பது முக்கிய அம்சமாகும்.முதல் முறையாக ஸ்ருதி ஹாசனுடன் ஜோடி சேர்கிறார்.

labham 1 - 2026

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் ஸ்ருதி, விஜய் சேதுபதி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படத்தில் விஜய் சேதுபதி இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

labham 2 - 2026

தெலுங்கில் பிரபலமான ஜெகபதி பாபு இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இளம் நாயகன் கலையரசன், தன்ஷிகா ஆகியோர் நடிக்கவிருப்பதாக வந்த தகவலை அடுத்து தமிழ் திரையுலகின் நடிகர் மற்றும் இயக்குனர் பாண்டியராஜனின் மகன் ப்ரித்வியும் இப்படத்தில் இணைத்துள்ளதாக அறிவிப்பு விடுத்தனர்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அம்பாசமுத்திரம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img