
வோக் இதழ் நடத்திய பியூட்டி விருதுகள் 2019 நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலிவுட் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்து தங்களது பேஷன் உடைகளால் கலங்கடித்தனர். மேலும் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு பல்வேறு விருதுகளையும் வழங்கி சந்தோஷத்தில் மூழ்கடித்தனர்.
சர்வதேச ஃபேஷன் இதழான வோக், இந்தியாவில் வோக் பியூட்டி விருதுகள் 2019 வழங்கும் விழா மும்பையின் ஜே.டபிள்யூ மேரியட்டில் செப்டம்பர் 26ஆம் தேதி அன்று நடத்தியது. அன்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த அரங்கமே பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களால் மினு மினுவென ஒளிர்ந்தது.
இந்த 10ஆம் ஆண்டு வோக் பியூட்டி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், பாலிவுட் பிரபலங்கள் பெரும்பாலானவர்கள் கலந்துகொண்டனர். அப்போது, அந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியின் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்து தங்களது பேஷன் ஆடைகளினால் அ(ந்த)ரங்கத்தை அதிர வைத்தனர் .
சன்னி லியோன், மலாக்கா அரோரா, மல்லிகா அரோரா, பியூட்டி ஐகான் ஆலியா பட், சாரா அலி கான், பூமி பெட்னேகர், க்ரிட்டி சனான், ரகுல் ப்ரீத், ராதிகா ஆப்தே என பல பாலிவுட் பிரபலங்கள் தங்களது சிறந்த பேஷன் ஆடைகளை அணிந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
சாரா அலி கான் தனது நீல நிற உடையால் பார்வையாளர்களை ஈர்த்து சிறந்த புதுமுக நடிகைக்கான விருதைப் பெற்றார். பிரகாசமான பிங்க் நிற கவுன் அணிந்து வந்து பியூட்டி ஆஃப் தி இயர் விருதை வென்றார் க்ரிட்டி சனான். மலாக்கா அரோரா இந்த ஆண்டின் ஃபிட்ஸ்பிரேஷன் விருதை வென்றார்.
மூத்த பாலிவுட் நடிகையான ஷர்மிளா தாகூர் இந்த விழாவிற்கு சேலை அணிந்து வந்து பியூட்டி லெஜண்ட் பட்டத்தை வென்றார். இது போல மேலும் பல விருதுகளை வழங்கி பாலிவுட் பிரபலங்களை சந்தோஷத்தில் மூழ்கடித்தனர். வோக் பியூட்டி விருதுகள் 2019 விழா மிகவும் சிறப்பாக மும்பையில் நடைபெற்றது.


















