இந்திரன் கெட்டதும் பிகராலே சந்திரன் கெட்டதும் பிகராலே! யோகிபாபு ஆட்டம்!

சினி நியூஸ் சினிமா
kaavi aavi devi - 2026

கடந்த 1973ஆம் ஆண்டு வெளியாகி காமெடியில் கலக்கிய படம் காசி யாத்திரை. இந்தப் படத்திற்கு கதை எழுதியவர் குகநாதன். எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இப்படத்தில் காமெடி நடிகர்களான வி.கே.ராமசாமி, சோ.ராமசாமி, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், மனோரமா, டைப்பிஸ்ட் கோபு என நகைச்சுவை பட்டாளமே நடித்திருந்தனர். தற்போது 46 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக காவி ஆவி நடுவுல தேவி என்னும் பெயரில் தயாரிக்கின்றனர்.

மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இந்த படம் விரையில் திரைக்கு வர உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். எழுத்தாளர் புகழ்மணி, ‘காவி ஆவி நடுவுல தேவி’ என்ற புதிய படத்தை டைரக்டு செய்து இருக்கிறார்.

kasi yathirai - 2026

யோகி பாபு 11 தோற்றங்களில் நடித்துள்ளார் இப்படத்தின் கதாசிரியர் வி.சி.குகநாதன் கூறியதாவது:- இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை படம். காதலர்களை சேர்த்து வைக்கும் குழலூதும் கண்ணனாக யோகி பாபுவும், அவருக்கு எதிராக காதலர்களை பிரித்து வைப்பவராக மொட்டை ராஜேந்திரனும், மலையாள மந்திரவாதியாக இமான் அண்ணாச்சியும் பஸ் கம்பெனி முதலாளியாக தம்பி ராமையாவும் நடித்துள்ளனர்.

இவர்கள் மூவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டி பட்டையை கிளப்பும் என்கிறார் இப்படத்தின் கதாசிரியரான வி.சி.குகநாதன் இவர் ஏற்கனவே மனிதன், மைனர் மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.

சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சியையும். வி.சி.குகநாதன் கதையையும். கணேசன் ஒளிப்பதிவையும், ராஜ் கீர்த்தி படத்தொகுப்பையும், டாக்டர் ஹிருதயா, ஜீவன் மயில் இருவரும் பாடல்களையும், தயாரிப்பு நிர்வாகத்தை கே.தமிழ்செல்வன், எம்.சரவணனும், மேற்பார்வையை ஜெ.துரையும், கவனிக்கின்றனர் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவு பெற்றது.

kaavi aavi devi 1 - 2026

இதன் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமிப்பூட்டும் வகையில் தயாராகி உள்ளது.மேலும் இதில் கதாநாயகனாக ராம் சுந்தர் அறிமுகமாக இவரின் ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். சிவசங்கர், வேல்சிவா, ரிஷா, சிவகாமி, வாணி, டக்ளா ராமு, தீபலட்சுமி இன்னும் பலர் இந்தப் படத்தில் பங்கு பெற்றுள்ளனர்.

யோகி பாபு ஆவியாக வந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நடன அழகிகளுடன் கவர்ச்சி நடனமாடி பாடிய “இந்திரன் கெட்டதும் பிகராலே… சந்திரன் கெட்டதும் பிகராலே”என்ற பாடலுக்கான காட்சிகள் சிவசங்கர் மாஸ்டர் நடனம் சொல்லி கொடுக்க படமாக்கப்பட்டது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.