படப்பிடிப்பில் திடீர் மரணம்…! பாவம்… நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி!

Published:

krishnamurthi actor passedaway - 2026

நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார். ’தவசி’ உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த கிருஷ்ணமூர்த்தி தேனி மாவட்டம் குமுளியில் நடந்த படபிடிப்பின் போது, மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடிகர் கிருஷ்ணமூர்த்தி. காமெடி நடிகராகப் பரிமளித்த இவர், காமெடி நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நடித்த காட்சிகள் ரசிகர்களால் மறக்க முடியாதவை… நினைத்து நினைத்துச் சிரிக்க வைப்பவை.

தவசி படத்தில் “எஸ்க்யூஸ்மி, சாரி ஃபார் த டிஸ்டபென்ஸ், இந்த அட்ரஸ் எங்க இருக்கு கொஞ்சம் சொல்றீங்களா” என்று நடிகர் வடிவேலுவிடம் பேசும் ஒற்றை வசனத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென இடம் பிடித்தார்.

Krishnamurthy12 - 2026

கிருஷ்ணமூர்த்தி, தம் நண்பரான நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நடித்த காட்சிகள் பெரும் வரவேற்பு பெற்றவை. விளம்பர தயாரிப்பு உதவி மேலாளராக சினிமாவில் தன் வாழ்க்கையை தொடங்கியவர். நடிகர் வடிவேலுவின் குழுவில் இணைந்து சிறு சிறு வேடங்களில் நடித்து பின்னர் பிரபல நகைச்சுவை நடிகரானார்.

கேரளாவில் உள்ள குமுளி பகுதியின் அருகே வண்டிப்பெரியாரில் நடந்த படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு படக் குழுவினர் அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

கிருஷ்ணமூர்த்தியின் திடீர் மரணம் சக கலைஞர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகினர் தங்கள் அதிர்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

https://youtu.be/tP4W1rA0GEM

Related articles

Recent articles

spot_img