ரசிகரை தொட்ட பின் விஜய் கை கழுவினால் உங்களுக்கு என்ன பிரச்சனை? கொதிக்கும் ரசிகர்!

சினி நியூஸ் சினிமா
vijay bigil - 2026

பிகில் படத்தின் இசைவெளிட்டு விழாவில், யாரை எங்கு வைக்க வேண்டுமோ; அவரை அங்குதான் வைக்க வேண்டும். அப்போதுதான் எல்லாம் சரியாக அமையும்’ என்று நடிகர் விஜய் பேசியதற்கு எதிராக, அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இயக்குனர் சாமி, நடிகர் விஜய்யை விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.மிருகம், உயிர்’, சிந்து சமவெளி உள்ளிட்ட சர்ச்சைப் படங்களை இயக்கியவர் இயக்குநர் சாமி. 2015ல் கங்காரு என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. தற்போது, அடுத்தப் படத்துக்கான பணிகளைக் கவனித்து வருகிறார் இயக்குநர் சாமி.

நடிகர் விஜய்யை விமர்சித்து அவர் பேசியிருக்கும் வீடியோ பதிவொன்று, இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் சாமி கூறியிருப்பதாவது :முன்னாள் இளைய தளபதி விஜய் சார் எப்படி இருக்கீங்க?

samy - 2026

என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என தெரியவில்லை. நான், உங்களை நான்கு முறை மட்டுமே சந்தித்துள்ளேன். மூன்று முறை உங்கள் வீட்டில். சந்தித்தேன். உங்கள் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருடைய தோஸ்த் படத்துக்கு நான் தான் வசனம் எழுதினேன்.

அந்தச் சமயத்தில், சாலிக்கிராமம் ஸ்டேட் பாங்க் காலனி வீட்டில், உங்களை சந்தித்துள்ளேன். அதற்குப்பின், ஒருமுறை இரண்டு மணி நேரம் அன்றில் பறவைகள் கதைச் சொல்லியிருக்கிறேன். இதெல்லாம், 2000ல் நடந்தது.

மிருகம்’, உயிர், சிந்து சமவெளி, கங்காரு போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கிய இயக்குநர் சாமி, நான் தான். உங்களிடம் அன்றில் பறவைகள் என்ற குடும்பக் கதையைச் சொல்ல வந்தேன். அதை நீங்கள் ப்ரியமானவளே படத்தின் ஷூட்டிங்கில்தான் கேட்டீர்கள். சினிமாவில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்; பிரச்சினையில்லை.

நடிகர் ரஜினி மாதிரி நடிப்பை மட்டும் பாருங்கள். வாயைத் திறந்து பேசாதீங்க ப்ளீஸ். ஏனென்றால், நீங்கள் பேசுவதால், உங்களுக்கு நீங்களே ஆப்பு வைத்துக் கொள்கிறீர்கள். பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது, யாரை எங்கு வைக்கணுமோ அங்கு வைக்கணும் என பேசினீர்கள். அப்படியென்றால், கடவுள் உங்களை எங்கு வைக்க வேண்டுமோ, அங்குதான் வைத்துள்ளார்.

நீங்கள் தேவையில்லாமல் வாயைத் திறந்து இஷ்டத்துக்கும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் மாட்டிக் கொள்கிறீர்கள். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். சினிமாவில் மட்டும் நீங்கள் நடிகர் அல்ல; நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் என்பது எனக்குத் தெரியும். ரசிகர்களுடன் வாரந்தோறும் போட்டோ எடுத்துக் கொண்டு, என் நெஞ்சில் குடியிருக்கும் தெய்வங்கள் எனப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

vijay fans - 2026

அவர்களுடன் கை கொடுத்துவிட்டு, போட்டோ எடுத்துவிட்டு, வீட்டுக்கு உள்ளே போய் டெட்டால் போட்டு கை கழுவியதையெல்லாம் நானே பார்த்திருக்கிறேன். இப்படிப்பட்ட நீங்கள்தான், யாரை எங்கு வைக்க வேண்டுமோ, அவர்களை அங்கு வைக்க வேண்டும் என பேசுகிறீர்கள்.

உங்களின் உண்மையான முகம் வெளியுலகிற்கு தெரியவந்தால், உங்களை உங்கள் ரசிகர்கள் கூட சீண்ட மாட்டார்கள். புறக்கணிப்பார்கள். இப்படியிருக்கும் நீங்கள், மற்றவர்கள் குறித்தெல்லாம் பேச எந்த அருகதையும் இல்லை. இனியும் அப்படி நீங்கள் பேசினால், விளைவுகள் மோசமாக இருக்கும்.இவ்வாறு சாமி பேசியிருக்கிறார்

இதற்கு தற்பொழுது விஜய் ரசிகர்கள் நிறைய விடியோவினை வெளியிட்டு வருகின்றனர், விஜய் பற்றி பேசுவதற்கு நான்கு படத்தை எடுத்த இவருக்கு என்ன தகுதி இருக்கிறது 60 படங்களுக்கு மேல் நடித்த விஜய்க்கு தகுதி இருக்கிறது என்றும் கோடிகணக்கில் விஜய் சம்பளம் வாங்குவது ஏற்புடையது என்றும் கூறியுள்ளார்.

மேலும் இயக்குனர் சாமி யாருடைய தூண்டிதலின் பேரிலோ இதனை வெளியிட்டு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். விஜய் வாய் திறந்தால் யாருக்கு பிரச்சனையோ அவர்களது வேலை இது என்றும் கூறியிருக்கிறார். இப்பொழுது பேசி ஆப்பு வைத்துக் கொண்டது இயக்குனர் சாமி என்றும் கூறியுள்ளார்.

vijay fan - 2026

தன்னுடைய படங்கள் பெரிய அளவில் செல்லாத நிலையிலும் தான் பெரிய அளவில் பேசப்பட வேண்டும் என்பதற்காகவும் இது போல் சிலர் சில வீடியோக்களை விட்டு வைரலாகி விடுகின்றனர். அந்த வகையில் சாமியின் இந்த டெக்னிக் நன்றாகவே வேலை செய்துள்ளது என்றும் அந்த ரசிகர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

மற்றைய பெரிய நடிகர்கள் சோம்பேறிதனம் காரணமாக சும்மா உட்கார்ந்திருப்பதாகவும் விஜய் அப்படி இல்லை என்றும், விஜய் ரசிகர்கள் இயக்குனர் சாமி மீது கொலை வெறியில் உள்ளதாகவும், ஏகப்பட்ட ரசிகர்களுடன் கைக்குலுக்கி தோளில் கைப்போட்டு போட்டோ எடுக்கும் விஜய் அதன் பின் அவர்களது வியர்வை துளிகள் தன் கைகளில் படுவதால் கை கழுவி இருப்பார். அதில் என்ன தவறு இது சுத்தமான ஒரு விஷயம் தானே கிருமிகளிடமிருந்தும் மற்றவருக்கு இருக்கும் வியாதிகளில் இருந்தும் நம்மை காக்க செய்யும் ஒன்று தானே. ஏன் சாமி கையே கழுவ மாட்டாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.