
பிகில் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில் நெட்டிசன்கள் அதனை மரண கலாய் செய்து வருகின்றனர்.
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிகில். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிகில் படத்தின் ட்ரெயிலர் நேற்று மாலை வெளியானது. இதனை விஜய் ரசிகர்கள் ஒரு புறம் கொண்டாட நெட்டிசன்கள் மறுபுறம் வச்சு செய்து வருகின்றனர்.
ட்ரெய்லரில் வயதான தோற்றத்தில் உள்ள விஜய், பிகிலே என கத்துகிறார். இதனை வைத்து நெட்டிசன்கள் செம கலாய் கலாய்த்துள்ளனர்.

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் கலக்கி வரும் பாட்டி பிகிலையும் விட்டு வைக்காமல் விஜயை போன்று கைகளை தூக்கி பிகிலே என கத்தி மரண பங்கம் செய்துள்ளார்.

ட்ரெயிலரில் விஜய் பேசும் டயலாக்குக்கு சேரில் அமர்ந்தபடி லிப்மூவ்மென்ட் மற்றும் ரியாக்ஷன் கொடுக்கும் அந்த பாட்டி அப்படியே கைகளை உயர்த்தி பிகிலே.. என கத்த பின்னால் இருப்பவர்களும் அப்படியே வழி மொழிகின்றனர்.

பாட்டியின் இந்த அசத்தல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் பாட்டியின் இந்த டப்ஸ் மேஷை லைக் செய்துள்ளனர்.



