
அமெரிக்காவில் புதிதாக கட்டப்பட்டு வரும் உணவு விடுதியில் கிரேன் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்கா நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் ஹார்ட் ராக் நிறுவனத்திற்கு சொந்தமான புதிய உணவு விடுதி ஒன்று கட்டுமான பணியில் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கட்டுமான பணிகள் இரவு பகலாக மும்முரமாக நடைபெற்று வந்துள்ளது. ஏராளமான கட்டிட தொழிலாளிகள் வேலை பார்த்து வரும் இந்த ஹோட்டலில் மதிய உணவு இடைவேளைக்காக அனைவரும் உணவு அருந்த சென்றுள்ளனர்.
அப்போது அங்கு கற்களை மேலே தூக்கி செல்லும் கிரேன் ஒன்று நின்றுள்ளது இந்நிலையில் கிரேன் ஆபரேட்டர் சரியாக கிரேனை நிறுத்தாமல் உணவருந்த சென்றதால் கிரேன் அங்கிருந்து சரிந்து விழுந்ததில் உணவருந்திக் கொண்டிருந்த கட்டிட தொழிலாளிகள் விபத்தில் சிக்கிக்கொண்டனர்.
பின்னர் உடனே அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மேலும் 18 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதையடுத்து வேலை முடிந்தவுடன் அல்லது உணவு இடைவேளைக்கு செல்லும்போது அங்கு உள்ள கழிவுகளை முறையாக பராமரிப்பாளர் நிறுத்திவிட்டு செல்லாதது இந்த விபத்துக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்