விஜய் தேவரகொண்டா அலைந்து வாங்கிய நடிகையின் போன் நம்பர்!

vijay dev

நடிகர் விஜய் தேவரகொண்டா வேகமாக வளர்ந்து வரும் நடிகர். இவர் நடிக்கும் படங்கள் தெலுங்கில் மட்டுமின்றி தமிழ், கன்னடம், மலையாளம் உட்பட பல மொழிகளில் ஹிட் அடித்து வருகிறது.

விஜய்தேவரகொண்டாவுக்கு ரசிகர் வட்டத்தைவிட ரசிகைகள் வட்டம் அதிகம். ஜான்வி உள்ளிட்ட சில நடிகைள் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடியாக நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

janvi

அவருடன் மூன்று படங்களில் ஜோடியாக நடித்த ராஷ்மிகாவுக்கும், விஜய்தேவரகொண்டாவுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக ஒரு ரூமரும் திரையுலகில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதை ராஷ்மிகா மறுத்ததுடன் அடுத்த 2 வருடத்துக்கு விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

rashmika

நடிகைகளின் கனவு நாயகனாக இருக்கும் விஜய்தேவரகொண்டா நள்ளிரவில் நடிகையுடன் போனில் பேச துடியாய் துடித்திருக்கிறார்.

vijay dev 1

பாலிவுட் நடிகை அலியாபட். தற்போது ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அலியா நடித்த, ‘கல்லி பாய்’ இந்தி படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. அப்படத்தை பார்த்ததிலிருந்து அலியாபட்டுடன் பேச வேண்டும், அவரிடம் பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்று துடியாய் துடித்தார் விஜய் தேவரகொண்டா.

aliya

பலரிடம் அலியாவின் செல்போன் எண்ணை கேட்டார். கிடைக்கவில்லை. பிறகு இந்தி பட இயக்குனர் கரண் ஜோஹரிடம் தொடர்பு கொண்டு அலியாபட் செல் நம்பர் வாங்கி பேசினாராம்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :