திருப்பூரில் மது பாட்டிலால் நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சின்ராசு என்பவர் திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து தனது நண்பர்களுடன் அங்கு உள்ள அறையில் தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று மற்றும் நாளை மதுக் கடைகள் விடுமுறை என்பதால் சின்ராஜ் தனது நண்பர் கண்ணனுடன் சேர்ந்து இரண்டு மதுபாட்டில்களை வாங்கி தனது அறையில் நேற்று வைத்திருந்துள்ளார்.
கண்ணன் வெளியே சென்ற நிலையில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மது பாட்டில்களை பத்திரமாக வைக்க கோரியுள்ளார்.
இதனை கேட்ட உடன் தங்கியிருந்த நண்பர் ராஜ்குமார், சின்ராஜ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் ராஜ்குமார் கத்தியால் சின்ராசை குத்தியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து ராஜ்குமாரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூரைச் சேர்ந்த சின்ராஜ் திருப்பூர் மாவட்டத்திற்கு வந்து 9 நாட்களே ஆன நிலையில் கொலையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,