தமிழில் 28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அமலா!

Published:

amala 1 - 2026

கைதி படத்துக்கு பிறகு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக சர்வானந்த் நடிக்க, அறிமுக இயக்குனர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் மற்றொரு படத்தையும் தயாரித்து வருகிறது.

இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சர்வானந்துடன் கதாநாயகியாக ரிதுவர்மா நடிக்கிறார்.

இவர்களுடன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அமலா அக்கினேனி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

1991-ல் பாசில் இயக்கத்தில் வெளியான கற்பூரமுல்லை படம்தான் அமலா தமிழில் நடித்த கடைசி படம். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 28 வருடங்களுக்கு பிறகு இப்போது அவர் தமிழில் ரீஎன்ட்ரியாகிறார். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார், சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு ஸ்ரீஜித் சாரங்.

Related articles

Recent articles

spot_img