spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்ஆசுதோஷ் கோவர்கரின் ‘பானிபட்’ பட டிரைலர் : பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர விருந்து!

ஆசுதோஷ் கோவர்கரின் ‘பானிபட்’ பட டிரைலர் : பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர விருந்து!

- Advertisement -
movie hindi panipat

சாதனை இயக்குனர் அஷுதோஷ் கோவரிகர், பல்வேறு சிறப்பான படைப்புகளை நமக்கு கடந்த காலத்தில் வழங்கியிருந்தாலும், மீண்டும் அத்தகைய ஒரு பிரம்மாண்டமான, கம்பீரமான படைப்பை நம் கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார்.

சஞ்சய் தத், கிரிதி சாணன், அர்ஜுன் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வெளியாகவிருக்கும் அதிரடி திரைப்படமான ‘பானிபட்’ வெளியீட்டு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்த டிரைலர் வெளியீட்டுக்கு முன்னதாக, ஊடகவியலாலர்களுக்கென ஒரு நட்பு ரீதியிலான சிறப்பு சந்திப்பை அவர் மும்பையில் ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த சந்திப்பில்,டிரைலரின் சிறப்பு பிரீவ்யூ காட்சி திரையிடப்பட்ட நிலையில், டிரைலர் ஊடகவியலாளர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது.

திரைப்பட குழுவினர் இத்தகைய பாராட்டுகளுக்கிடையே, மூன்று நடிகர்களும் இடம்பெற்ற ஒரு புதிய டிஜிட்டல் போஸ்டரை வெளியிட்டு மகிழ்ந்தனர். டிரைலர் மராட்டிய சாம்ராஜ்யத்தின் காவியக் கதையை விவரிப்பதாக அமைந்திருந்தது.

அருமையான பின்னணி இசை, அழகிய பின்னணிகாட்சிகள், ஆடம்பரமான கலை பங்களிப்புகள் என அனைத்தும் ஒரே புள்ளியில் இணைந்து, ரசிப்போர் கண்களுக்கு விருந்தாகிறது. இந்த படத்தில் அர்ஜுன் ஒரு போர் வீரனாகவும், சஞ்சய் தத் வில்லனாகவும், நடித்திருக்க, கிரிதியின் அழகும் அழகிய கதாபாத்திரமும் படத்திற்கு மெருகூட்டுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை சொடுக்கி, டிரைலரில் இடம்பெற்றுள்ள அதிவீர போர் காட்சிகளை கண்டு மகிழுங்கள். 

இயக்குனர் அஷுதோஷ் கோவரிகர் பேசுகையில், ‘ஊடகவியலாளர்களின் பின்னூட்டத்தை கேட்டு, பானிபட் திரைப்படக்குழு மிகவும் மகிழ்ந்து போயிருக்கிறது.  டிரைலர் வெளியீட்டுக்கு முன்னரே, அவர்களுக்காக ஒரு சிறப்பு டிரைலர் திரையிடலுக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

அது மிகவும் நேர்மறையான பின்னூட்டத்தை வழங்கி யிருக்கிறது. ரசிகர்ளுக்கும் இந்த டிரைலர் பிடிக்கும் என திடமாக நம்புகிறோம். அவர்களது எதிர்பார்ப்புகளை முடிந்த வரையில் நிறைவேற்றியிருப்பதாகவும் நம்புகிறோம்” என்றார்.

தயாரிப்பாளர் சுனிதா கோவரிகர், “பானிபட் டிரைலருக்கு கிடைத்த வரவேற்ப் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இந்த டிரைலரும், திரைப்படமும் பிடிக்கும் என நம்புகிறோம். இத்திரைப்பட குழுவினர் ஒவ்வொருவரும் கடின உழைப்பை தந்திருக்கிறார்கள். இப்படத்தின் வெற்றி அவர்களை பெருமகிழ்ச்சி அடையச் செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.’

ஷிபசிஷ் சர்கார், குழு தலைமை செயல் அதிகாரி – ரிலையன்ஸ் எண்டர்டைன்மென்ட் பேசும் போது, ‘இயக்குனர் அஷுதோஷ் மற்றும் அவரது பெரும் இலக்கியப் படைப்பான ‘பானிபட்’ திரைப்படத்துடனும் இணைந்திருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். இத்திரைப்படம் இவ்வுலக வரலாற்றின் மாபெரும் போரை நம் கண்முன் நிறுத்தும். டிரைலர் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், திரைப்படத்திற்கும் அனைத்து தரப்பினரும் ஏகோபித்த வரவேற்பை வழங்குவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.’

ரோஹித் ஷெலட்கர், நிறுவனர், விஷன் வர்ல்ட் பிலிம்ஸ், ‘வரலாறும் திரைப்படங்களும் எனக்கு மிகவும் பிடித்த உணர்வுப்பூர்வமாக விஷயங்கள். அந்த இரண்டையும் இணைக்கும் வகையில் அமைந்த இத்திரைப்படம் எனக்கு கிடைத்த மகத்தானதொரு வாய்ப்பு. மராட்டிய சமுதாயத்தை சார்ந்தவனாகிய நான், மராட்டிய புராணக்கதைகளை, அதன் நாயகர்களை அதிகம் விரும்புகிறவன். ‘ஜோதா அக்பர்’, ‘ஸ்வதேஷ்’, ‘லகான்’ உள்ளிட்ட பெரும் காவிய படங்களைத் தந்த மதிப்பிற்குரிய இயக்குனர் அஷுதோஷ் கோவரிகர் உடன் இணைந்து இப்படத்தில் பணியாற்றுவதென்பது எனது மாபெரும் கனவு நனவானயே காட்டுகிறது’ என்றார்.  

1761 ஆம் ஆண்டு பின்னணியில் அமைக்கப்பட்ட ‘பானிபட்’ திரைப்படத்தின் கதைகளம் மராட்டிய சாம்ராஜ்யத்தைப் பற்றியது. அச்சமயம் மராட்டிய சாம்ராஜ்யம் தனது உச்சநிலையை எட்டி இருந்தது. ஒரு படையெடுப்பாளரின் கவனத்தை ஈர்க்காத வரையில், இந்துஸ்தான் மீதான அவர்களின் பிடிப்பும், அவர்களை சவாலுக்கு அழைப்பதற்கு யாருமற்ற நிலையும் நீடித்தது.

இத்தகைய ஒரு சூழ்நிலையில் தான், படையெடுத்து வருகின்ற ஆப்கானிஸ்தான் மன்னர் அஹ்மத் ஷா அப்தாலியின் (சஞ்சய் தத்) படைகளை விரட்டும் பொருட்டு, மராட்டிய இராணுவ தளபதி சதாஷிவ் ராவ் பாவு (அர்ஜுன் கபூர்) வடதிசை நோக்கி தனது படைகளுடன் ஆப்கானிஸ்தான் படைகளை எதிர்த்து ஓரு அவசரப் போர் பயணத்தை துவக்கி, தனது படைகளை வழிநடத்துகிறார்.  

‘ஏஜிபிபிஎல்’ சார்பாக சுனிதா கோவரிகர், ‘விஷன் வேர்ல்டு பிலிம்ஸ்’ சார்பாக ரோஹித் ஷெலட்கருடன் இணைந்து இப்பத்தை தயாரிக்க, அசுதோஷ் கோவரிகர் இயக்கியிருக் கிறார். இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 6 ஆம் தேதி உலகெங்கும் திரையிடப்பட தயாராக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe