
பாலக் முறுக்கு
தேவையானவை:
அரிசி மாவு – 2 கப்,
பொட்டுக்கடலை மாவு – அரை கப்,
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
பாலக் கீரை – அரை கட்டு,
மிளகு – அரை டீஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
ஓமம் – அரை டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:

பாலக் கீரையை சிறிதளவு தண்ணீரில் வேகவிட்டு, ஆற வைத்து மிக்ஸியில் அரைக்க வும். ஓமம், மிளகு, சீரகம் ஆகிய வற்றை கொரகொரப்பாகப் பொடிக்கவும்.
இதனுடன் அரிசி மாவு, பொட்டுக் கடலை மாவு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் வெண்ணெய், அரைத்த பசலைக் கீரை (தேவைப்பட்டால் தண்ணீர்) சேர்த்து மாவை நன்கு பிசையவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், முறுக்கு அச்சில் மாவைப்போட்டு மிதமான சூட்டில் எண்ணையில் பிழிந்து இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.