
காமெடி கிங் வடிவேலு குறித்து இன்றும் வருத்தப் பட்டு பேசுபவர்கள் பலரும், அந்த தேர்தலையும், அப்போது வடிவேலுவை திமுக., பயன்படுத்திய விதத்தையும் நினைத்து நினைத்து நெஞ்சு ஆறாமல் பேசுவார்கள். சின்னக் குழந்தைகளும் கூட மிக விரும்பிப் பார்த்த மேனரிசம் கொண்ட கலைஞன்! வடிவேலு காமெடி போட்டுவிட்டு, குழந்தைகளை டிவி பெட்டி முன்பே அமரவைத்து விட்டு, தாய்மார்கள் தங்கள் வீட்டு வேலைகளில் கவலையின்றி கவனம் செலுத்திய அளவுக்கு அனைத்துத் தரப்பும் விரும்பிய மகா கலைஞனாகத் திகழ்ந்தவர் வடிவேலு.
எல்லாம் திமுக., தன் பக்கம் இழுத்துக் கொள்ளும் வரைதான்!

சினிமாவை வைத்தே வளர்ந்தவை திராவிட இயக்கங்கள். சினிமாத்துறையை வளைத்துவிட்டால் போதும், தமிழகத்தையே வளைத்துவிடலாம் என்று திட்டமிட்டு காய் நகர்த்தி, சினிமா எனும் ஊடகத்தை தன் வசப் படுத்திக் கொண்டது திராவிட இயக்கம்.
அது மிகச் சரியாக வேலை செய்தது. தமிழகம் இன்று சிந்திக்கும் திறன் இழந்த இளைஞர்கள் அதிகம் கொண்ட மாநிலமாக முன் நிற்கிறது. அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த இள வயது மூளைகள் இன்று, சிறுமூளை சின்னாபின்னமாக டாஸ்மாக் சரக்குகளின் பின்னே ஓடி ஒளிந்து கொண்டிருப்பதும், சினிமாத் திரை எப்போது விலகும் என்று வாய் பிளந்து கிடப்பதும் காணும் போது, திராவிடம் என்ற சாத்தான் சிதைத்த கொடூரங்கள் ரத்தக் கண்ணீரை வரவழைக்கும்!
சினிமாத்துறை மூலம் வளர்ந்தவர் சினிமாத்துரை கருணாநிதி. ஆனால் அதற்காகப் பாடுபட்டவர்களோ, கணக்கு கேட்டார் என கண்மூடித் தனமாக விரட்டப் பட்டார். அவரைப் போல் எத்தனையோ கலைஞர்கள் தங்கள் கலைத்திறனை அடகுவைத்து, ஒரே ஒரு கலைஞர் பேர் வாங்க தங்களைத் தொலைத்து நின்றார்கள்.

அப்படித் தொலைந்து போனவர்களில் ஒருவராய் ஆனவர் வடிவேலு. இப்போதும் அவர் நிமிர்ந்து நிற்க பல்வேறு சங்கடங்களை எதிர்கொண்டிருக்கிறார்.
வடிவேலுவைப் போல் இன்னுமொரு ஹீரோ. அடப்பாவமே ரகத்தில் இருக்கும் நடிகர் பிரசாந்த்! அவர் மட்டும் அந்தப் படத்தில் நடிக்காமல் இருந்திருந்தால் அஜித் மற்றும் விஜயை விட டாப் கியரில் எகிறியிருப்பார்.
தமிழ்த் திரையுலகில், சில வருடங்களுக்கு முன்பு முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். இப்போதும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் பிரசாந்த், நல்ல உடல் கட்டும், நடிப்புத் திறமையும் கொண்டிருந்தாலும், அந்த ஒரு படத்தில் நடித்ததால் எல்லாப் பொலிவையும் இழந்து தவிக்கிறார்.
பிரசாந்த் முக்கிய வேடத்தில் நடித்து இறுதியாக வெளியான ஜானி என்ற படம் கூட, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன் பின்னர் பிரசாந்த் தன் ஐம்பதாவது படமாக, தெலுங்கில் வெளியான வினய விதய ராமா என்ற படத்தில் துணை நடிகராக நடித்து, அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார்.
இன்று தமிழகத்தை மிரட்டிக் கொண்டிருக்கும் தல, தளபதிகளுக்கெல்லாம் முன்பே நல்ல பெயர் எடுத்தவர் பிரசாந்த். ஆனால், இவரது மார்க்கெட் சரிந்ததற்கு முக்கியக் காரணமே அவர் கருணாநிதி கதையான பொன்னர்-சங்கர் படத்தில் நடித்ததுதான் என்கிறார்கள் திரையுலகினர்.
மிக பிரம்மாண்டமாக, பெருஞ் செலவில் எடுக்கப்பட்டு, மிகப் பெரும் தோல்வியை சந்தித்த படம் அது. இந்தப் படம், கருணாநிதி என்ற குயுக்தி நிறைந்த அரசியல்வாதியின் சொந்த சோகக்கதை என்ற பெயரைத் தாங்கியிராமல், தோல்விக்குக் காரணமாக பிரசாந்த் இட்டுக் கட்டப் பட்டதால், பின்னாளில் பிரசாந்தை வைத்து அதிக பட்ஜெட்டில் படத்தை இயக்க எந்த இயக்குனரும் எந்தத் தயாரிப்பாளரும் தயாராக இல்லை.
பொன்னர் சங்கருக்குப் பின்னர், ஒரு தனித்துவ முத்திரை குத்தப் பட்ட பிரசாந்த், அரசியல் பிரச்னைகளால் சரியான பட வாய்ப்பு இன்றித் தவித்தார். வேறு வழியின்றி எப்படியாவது இழந்த மார்க்கெட்டைப் பிடித்துவிட வேண்டுமென்று, அதிரடி ஆக்சன் கதைகளாக தேர்வு செய்து நடித்துப் பார்த்தார். ஆனாலும், அந்த ராசி… இன்றுவரை வேலை செய்கிறது!