சிரஞ்சிவிக்கு ‘நோ’ கௌதம் மேனனுக்கு ‘ஓகே’ சொன்ன அனுஷ்கா!

சினி நியூஸ் சினிமா
anushka - 2026

‘பாகமதி’ படத்திற்கு பிறகு சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த அனுஷ்கா, தற்போது ஹேமந்த் மதுக்கர் இயக்கியுள்ள நிசப்தம் படத்தில் நடித்துள்ளார். மாற்றுத்திறனாளி பெண்ணாக அவர் நடித்துள்ள இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

இதையடுத்து இன்னும் புது படங்கள் எதிலும் அனுஷ்கா ஒப்பந்தம் ஆகவில்லை ஆனால் தனுஷ் நடித்த அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேசுக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் வேடத்தில் நடிக்க அழைத்தபோது அவர் மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகின. சிரஞ்சீவி நடிக்கும் கமர்ஷியல் படமொன்றில் நடிக்க அப்பட இயக்குனர் கெராட்டாலா சிவா அணுகியபோது ஏற்க மறுத்துவிட்டார் அனுஷ்கா.

நிசப்தம் படப்பிடிப்பை முடித்த பிறகு சில டைரக்டர்களிடம் கதை கேட்டு வந்த அனுஷ்கா, அந்த படங்களில் ஒரு படத்தைக்கூட ஓகே பண்ணவில்லையாம். கதை பிடிக்கவில்லை, கதாபாத்திரம் பிடிக்கவில்லை என்று சொல்லி தவிர்த்து விட்டதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது நிசப்தம் ஷூட்டிங்கிலிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு அமெரிக்கா பறந்துவிட்டார். அங்கு ஒரு மாதம் தங்கி உடல் எடை குறைப்பதற்கு சிகிச்சை மேற்கொண்டு திரும்ப உள்ளார்.

கவுதம் மேனன் அடுத்து இயக்க உள்ள தமிழ், தெலுங்கு படமொன்றில் நடிக்க கேட்டதும் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதையாக உருவாகிறது. 90களின் காலகட்டத்தில் நடப்பது போன்று இக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும் அதை தற்கால சூழலுக்கு ஏற்ப கவுதம் மேனன் மாற்றி படமாக்க உள்ளாராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.