தா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் புரமோஷனுக்காக சிறப்பு விமானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யா நடித்துள்ளார். கோடை விடுமுறையில் இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது.
இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை தழுவியே இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை விமானம் மூலம் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.அதன் ஒரு பகுதியை சூரரைப் போற்று போஸ்டருடன் கூடிய விமானத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற விழாவில், சூர்யா, சுதா கொங்கரா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு போஸ்டருடன் கூடிய விமானத்தை அறிமுகம் செய்தனர்.
சூர்யா படத்திற்கு விமானத்தில் புரமோஷன் செய்யப்படுவது இதுவே முதன்முறை. இதற்குமுன் ரஜினியின் காலா, தர்பார் படங்களுக்கு மட்டுமே விமானத்தில் புரமோஷன் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..