December 6, 2025, 8:55 PM
26.8 C
Chennai

இனிமே நீ தூங்கவே மாட்ட பொறுக்கி பயலே.. விஷாலை திட்டும் மிஸ்கின்!

miskin - 2025

தன் மீது குற்றம் சுமத்திய விஷாலை , இயக்குநர் மிஷ்கின் கடுமையாக சாடியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மிஷ்கின் , தான் 13 கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறிய விஷால் அதனை நிரூபிக்க வேண்டும் என குறிப்ப்பிட்டார்.

தனது தாயை பழித்து பேசியதால் படத்தில் இருந்து விலகியதாக மிஷ்கின் தெரிவித்தார். விஷால் – மிஷ்கினின் மோதல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

vishal - 2025

கடந்த 2017ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா, வினய் ராய் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

அந்த படம் வெற்றியடைந்ததால், மீண்டும் மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா நடிப்பில் துப்பறிவாளன் 2 தொடங்கியது.

miskin 1 1 - 2025

லண்டனில் பிரம்மாண்டமாக துப்பறிவாளன் 2 படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்புக்கு முன்னாள் இயக்குநர், மிஷ்கின் திடீரென 10 கண்டிஷன்களை போட்டதாக ஆதாரத்துடன் நடிகர் விஷால், தெரிவித்து, இதனால், தான் துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து மிஷ்கின் நீக்கப்பட்டார் என்பதையும் விளக்கி இருந்தார்.

mishkin - 2025

மேலும், எந்த ஒரு தயாரிப்பாளர்களும் இதுபோன்றவர்களிடம் பலியாடாகி விடாதீங்க என்றும் எச்சரித்து இருந்தார். விஷாலின் இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், இந்த அறிக்கை குறித்து எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் இயக்குநர் மிஷ்கின் மெளனம் காத்தது, குற்றத்தை மேலும் உறுதிப்படுத்தியதாகவே கருதப்பட்டது.

mishkin - 2025

இந்நிலையில், நேற்று மாலை நடைபெற்ற ஜி5 ஸ்ட்ரீமிங் தளத்தின் புதிய வெப்சீரிஸ் படைப்பான கண்ணாமூச்சி பிரஸ்மீட்டில், இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்டு, அந்த மேடையை பயன்படுத்தி, நடிகர் விஷாலை பொறுக்கி, பொறுக்கிப்பய என சகட்டு மேனிக்கு திட்டித் தீர்த்துள்ளது கோலிவுட் வட்டாரத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

mishkin 1 - 2025

துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து தன்னை நீக்கிவிட்டு, விஷாலே இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள கோபத்தில், மிஷ்கின், நடிகர் விஷாலை பொறுக்கி என தொடர்ந்து 7 முறை திட்டி தனது கோபத்தை தீர்த்துக் கொண்டார். மேலும், மிஷ்கினின் தாயை ஆபாசமாக விஷால் திட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து விஷால் குறித்து வசை பாடிய இயக்குநர் மிஷ்கின், தமிழ்நாட்டை விஷாலிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றும், உன் பக்கம் தர்மம் இருந்தா வாடா குருக்‌ஷேத்ர போருக்கு என்றும் இனிமே நீ தூங்கவே மாட்ட டா என்றும் பல சபதங்களை செய்தது போல ஆக்ரோஷத்தின் உச்சிக்கே சென்று ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார்.

13 July30 Actor Vishal - 2025

எப்படி வெறுங்கையோடு, பேனா கையில் இருக்கிற நம்பிக்கையோடு, சென்னைக்கு வந்தேனோ, அதேமாதிரி இப்பவும் பேனாவை நம்பி பிழைப்பேன் டா.. சினிமா வாய்ப்புகளே வரவில்லை என்றாலும், வாத்தியாரா போய் பாடம் நடத்துவேன் என கோபக் கனலை வீசி கண்ணாமூச்சி பிரஸ்மீட்டில் கண்ணகி அவதாரம் எடுத்து விட்டார் மிஷ்கின்.

பொறுக்கி என்றும், தம்பி மாதிரி நினைத்தேன், இப்படி பண்ணிட்டியே என்றும் விஷால் பற்றி வெறும் அவதூறு பேச்சுக்களாகவே பேசிய மிஷ்கின், அந்த 15 கட்டளைகள் குறித்து மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.

vishal i will continue to - 2025

சினிமாவை விட்டு தன்னை விஷால் ஓரங்கட்டி விடுவார் என்ற பயம் மிஷ்கினின் பேச்சில் இருந்தது தெளிவாகவே தெரிகிறது. இதற்கு விஷால் என்ன பதிலடி கொடுக்க உள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories