spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்கொரோனா: மேலும் ஒரு நடிகர் உயிரிழப்பு!

கொரோனா: மேலும் ஒரு நடிகர் உயிரிழப்பு!

- Advertisement -
antoniya 1

கொரோனாவுக்கு மேலும் ஒரு நடிகர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிரட்டி வருகிறது. இந்த உயிர்கொல்லி வைரஸுக்கு மருந்து கண்டுப்பிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக உள்ளன.

உலகம் முழுவதும் சுமார் 37 லட்சம் பேர், இந்த தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 61 ஆயிரத்தை தாண்டி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த கொரோனா வைரஸ் பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. இந்த தொற்று பல ஹாலிவுட் நடிகர்களின் உயிர்களையும் காவு வாங்கி இருக்கிறது. இந்நிலையில் மேலும் ஒருவராக, பிரபல கொலம்பிய நடிகர் அண்டோனியா போலிவர் இந்த வைரஸ் தொற்றுக்குப் பலியாகியுள்ளார். இவர் சிரோ குர்ரா (Ciro Guerra) இயக்கிய எம்ப்ராஸ் ஆப் த செர்பன்ட் என்ற கொலம்பிய படத்தில், முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பு அதில் பேசப்பட்டது.

இந்த படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரையிலும் இருந்தது. சிரோ குர்ரா இயக்கி நெட்பிளிக்ஸில் வெளியான கிரீன் பிரண்டீயர் என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார்.

இவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதை அடுத்து தெற்கு கொலம்பியா பகுதியில் உள்ள லெட்டிசியா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 1 ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு வயது 72. இதையடுத்து திரையுலகினர் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe