ஏப்ரல் 21, 2021, 11:16 காலை புதன்கிழமை
More

  வேட்டையாடு விளையாடு 2 ஹீரோயின்: அவங்கதான் போல..!

  vettayadu-vilayadu

  கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்து 2006-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய வேட்டையாடு விளையாடு படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. இதனை கவுதம் மேனன் உறுதிப்படுத்தி உள்ளார்.

  கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தை கைவசம் வைத்துள்ளார். இதன் படப்பிடிப்பை விபத்து மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைத்துள்ளனர். ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

  இந்த படத்தை முடித்த பிறகு தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். அதோடு வேட்டையாடு விளையாடு 2-ம் பாகத்துக்கான வேலைகளும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே அனுஷ்கா பெயர் அடிபட்டது.

  தற்போது கீர்த்தி சுரேஷ் பரிசீலனையில் இருப்பதாகவும், பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஊரடங்கு முடிந்ததும் வேட்டையாடு விளையாடு 2-ம் பாகத்தில் கமல்ஹாசனுடன் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் விவரம் வெளியாகும் என்று தெரிகிறது. கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். தெலுங்கிலும் 2 படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »