திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி! ஆனால் இதையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டுமாம்!

வரும் அக்.15 ஆம் தேதி முதல் சினிமா திரையரங்குகளை 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்க அனுமதி வழங்கியுள்ளது மத்திய அரசு! மேலும், சில கட்டுப்பாடுகளுடன், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்:
* 50 சதவீத இருக்கைகளில் மட்டும் ரசிகர்களை அனுமதித்து தியேட்டர்களை திறக்கலாம்.
* சினிமா தியேட்டர்களில் ஒவ்வொரு இருக்கைக்கும் நடுவே ஒரு இருக்கை இடைவெளி விட்டு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்
* ஒவ்வொரு காட்சி முடிந்த பின்னரும், கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும்.
* அனைவரும் மாஸ்க் அணிந்தபடி படம் பார்க்க அனுமதிக்க வேண்டும்
* தியேட்டர் உள்ளே பாக்கெட்களில் அடைத்து வைக்கப்பட்ட நொறுக்கு தீனிக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.
* ஆன்லைன் டிக்கெட் மூலம் முன்பதிவு செய்ய பார்வையாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
* தியேட்டரில் 24 முதல் 30 டிகிரியில் ஏ.சி., அளவை பராமரிக்க வேண்டும்
* ரசிகர்கள் தியேட்டருக்குள் செல்லும் போது சானிடைசர் வழங்கப்பட வேண்டும்.
* இடைவேளையின் போது ரசிகர்கள் இருக்கைகளை விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.
* கூட்டத்தை தடுக்க டிக்கெட் விற்பனைக்கு கவுண்டர்கள் நாள் முழுவதும் திறந்து வைக்கப்பட வேண்டும்.
* ரசிகர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே தியேட்டருக்குள் அனுமதிக்க வேண்டும்.
* கொரோனா அறிகுறி இருந்தால் தியேட்டருக்குள் அனுமதிக்கப்படக்கூடாது.
* திரைப்படம் துவங்கும் முன்பும் இடைவேளையின் போதும் கொரோனா விழிப்புணர்வு குறும்படங்களை திரையிட வேண்டும்…. என்று அதில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.