
நடிகர் அஜித் தற்போது வினொத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 6 மாதமாக நிறுத்தப்பட்டு தற்போதுதான் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மீண்டும் துவங்கியுள்ளது. இப்படப்பிடிப்பில் அஜித்தும் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
இந்நிலையில், இப்படத்தில் அஜித் ஈஸ்வர மூர்த்தி ஐபிஎஸ் என்கிற பெயரில் நடிப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து தல ரசிகர்கள் டிவிட்டரில் #ஈஸ்வரமூர்த்திIPS என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டிங்க் செய்து வருகின்றனர். இதுவரை சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டிவிட் செய்துள்ளனர்.
Source: Vellithirai News



