நடிகர் அஜித் தற்போது வினொத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 6 மாதமாக நிறுத்தப்பட்டு தற்போதுதான் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மீண்டும் துவங்கியுள்ளது. இப்படப்பிடிப்பில் அஜித்தும் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
இப்படத்தில் அஜித் ஈஸ்வர மூர்த்தி ஐபிஎஸ் என்கிற பெயரில் நடிப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தல ரசிகர்கள் டிவிட்டரில் #ஈஸ்வரமூர்த்திIPS என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டிங்க் செய்து வருகின்றனர். இதுவரை சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டிவிட் செய்துள்ளனர்.

இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமுடன் வீடியோ காலில் அஜித் பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். அஜித் நடித்த வேதாளம் பட ஹிந்தி ரீமேக்கில் ஜான் ஆபிரகாம் நடிக்கவுள்ளார். எனவே, அப்படம் தொடர்பாக அஜித் அவரிடம் பேசியிருக்கலாம் என கருதப்படுகிறது.
#Ajithkumar sir & @TheJohnAbraham sir on a Video Call ❤ #Valimai pic.twitter.com/CtYup3zmjN
— TN Ajith E-Fans (@tn_ajith) November 4, 2020



