நடிகர் தவசிக்கு சிவகார்த்திகேயன் உதவி – பாராட்டும் ரசிகர்கள்

சினி நியூஸ் சினிமா

thavasi

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் தவசி.
குறிப்பாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ‘கருப்பன் குசும்புக்காரன்’என அவர்  பேசிய வசனம் மிகவும் பிரபலம். இப்போதும் அவரின் அந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் புகைப்பட மீம்ஸாக பல இடங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இவர் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். புற்றுநோய் அவரின் உடலை உருக்கிவிட்டது. இது தொடர்பான அவரின் புகைப்படம் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.தனது சிகிச்சைக்கு திரைத்துறையினர் உதவ வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். 

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் அவருக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி செய்துள்ளார். அவரின் சார்பாக அவரின் ரசிகர் மன்ற தலைவர் மோகன் நேரில் சென்று தவசியிடம் வழங்கினார்.
Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.