
சன் டிவி-யில் தொகுப்பாளர், சீரியல் நடிகை, ஷார்ட் ஃபிலிம் நடிகை எனப் பன் முகங்களைக் கொண்ட நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நக்ஷத்ரா நாகேஷ்.
இவருக்கு சீரியல் மூலம் கிடைத்த ரசிகர்களை விட இன்ஸ்டாகிராம் மூலம் கிடைத்த ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். டிவி-யை விட சமுக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்கி வரும் நடிகையாக நக்ஷத்ரா நாகேஷ் இருக்கிறார்.
தமிழில் குறும்ப்டங்கள் வெளியாகிறது என்றாலே அதில் பெரும்பாலும் நக்ஷத்ரா தான் நாயகி ஆக இருப்பார்.
இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக காதல் தூது விடாத ஆண் ரசிகர்களே இல்லையாம். அந்த அளவுக்கு தினமும் காதல் கடிதங்கள் டிஜிட்டல் மயமாகப் பறக்குமாம். நாளுக்கு நாள் காதல் விண்ணப்பங்கள் அதிகமாகவே தற்போது தனது காதலரையே அறிமுகம் செய்து வைத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்து அறிவிப்பும் செய்துள்ளார் நக்ஷத்ரா.
நக்ஷத்ரா புகைப்படங்களை வெளியிட்டதில் இருந்து அவருக்கு வாழ்த்துகள் அதிகப்படியாகவே குவிந்து வருகிறதாம்.