valimai - 2026

வெளியான வலிமை டிரைலர்! 30 நிமிடத்திலேயே இவ்வளவு வியூஸா..?

சினிமா சினி நியூஸ்
valimai - 2026

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் வலிமை பட வெளியாக உள்ள நிலையில் படத்தில் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

அஜித், ஹியுமா குரேஷி, கார்த்திகேயா நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர், 2 பாடல்கள், தீம் மியூசிக் என தொடர்ந்து அப்டேட்களாக விட்டு வந்த வலிமை படக்குழு தரப்பிடம் இருந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை திடீரென ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், மாலை வலிமை படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் வெறியுடன் காத்திருந்த அஜித் ரசிகர்கள் உற்சாக மடைந்தனர்.

தியேட்டர்களில் வலிமை ட்ரெய்லரை பார்ப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. வலிமை ட்ரெய்லர் வெளியீடு குறித்து காலை முதல் அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

வலிமை ட்ரெய்லரை நேரடியாக தியேட்டரில் பார்க்க முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் வாங்குவது போல முண்டியடித்துக் கொண்டு ட்ரெய்லரை பார்க்க அஜித் ரசிகர்கள் டிக்கெட் வாங்கினர். வலிமை ட்ரெய்லர் டிக்கெட்டை வாங்கியவர்கள் அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித்தின் வலிமை ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வலிமை ட்ரெய்லரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வெளியான முப்பது நிமிடங்களிலே 1 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.