தமிழகத்தில் இரண்டாம் இடமாக நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் செல்வதற்கு வசதியாக இலவச பேட்டரி கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டது, நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துாரி துவக்கி வைத்தார் . ஏற்கனவே திருவண்ணாமலையில் முதல் முறையாக மாற்றுத் திறனாளிகளுக்காக பேட்டரி கார் அறிமுகம் செய்யப்பட்டு. பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாற்றுத் திறனாளிகள் தங்கள் அலுவலகம் வரை இலவசமாகச் செல்ல பேட்டரி கார் சேவை தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட்டு சிறப்பாக செய்பட்டு வருகிறது..
இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் 5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் உருவான பேட்டரி கார் இன்று பொதுமக்களுக்கு அர்பணிக்கப்பட்டது. கொக்கிர குளம் பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வரை இந்த பேட்டரி கார் வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.இன்று மனு நீதி நாளில் மனு அளிக்க வந்த முதியவர்கள் இந்த பேட்டரி காரில் புன்னகையுடன் பயணம் செய்தது காண்போரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஏற்கனவே நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவரில் ஓவியம் மற்றும் அன்புச்சுவர் என உருவாக்கிய சந்தீப் நந்துாரி தனது அடுத்த மைல் கல்லை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார் அறிமுகம்
Popular Categories



