
திமுக தலைவர் கருணாநிதி மிகச்சிறந்த பேச்சாளர் என்பதும் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசினாலும் வார்த்தைகள் தடம் பிறழாமல் அருவி போல் கொட்டி கொண்டிருக்கும் என்பதும் தெரிந்ததே
ஆனால் அவரது மகனும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் மேடையில் எழுதி வைத்து கொண்டு பேசுவதோடு, அதை பார்த்து பேசும்போது டங்க் ஸ்லிப் ஆகி தவறுதலாக பேசிவருவதால் நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறார்.
சமீபத்தில் அவர் ‘யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே’ என்று பேசியது இந்திய அளவில் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. இந்த நிலையில் நேற்று திமுக மண்டல மாநாட்டின் நிறைவு நாளில் கமல்ஹாசனின் மய்யம் கட்சி குறித்து பேசிய ஸ்டாலின் ‘பூனை மேல் மதி போல’ என்று மீண்டும் மீண்டும் டங்க் ஸ்லிப் ஆகியுள்ளார். இவர் தினமும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி கொடுத்து கொண்டிருப்பதை கண்டு திமுக அனுதாபிகளே வருத்தத்தில் உள்ளனர்.



