அஜித்குமார் இன் “AK61”61படப்பிடிப்பு துவக்கம்..

அஜித்குமார் இன் “AK61”61-வது படத்தின் படப்பிடிப்பு ஹைத்ராபாத்தில் பூஜையுடன் துவங்கியுள்ளது.

கொரோனாவால் பல பிரச்சனைகளை சந்தித்து வெளியான வலிமை போல் இல்லாமல் வேகமாக இப்படத்தை வெளியிட படக்குழு அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளது.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பைக்ரேஸ் விருந்தாக அமைந்து நல்ல வரவேற்பை பெற்று உலகெமெங்கும்ஸ நல்ல வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து மூன்றாவதாக அஜித் அடுத்தாக மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தின் படப்பிடிப்பு திங்கட்கிழமை பூஜையுடன் துவங்கியுள்ளது.திங்கட்கிழமை நடந்த பட பூஜையில் நடிகர் அஜித்குமார் தயாரிப்பாளர் போனிகபூர் இயக்குநர் வினோத் உட்பட பலர் பங்கேற்றனர் .

வரலாறு மங்காத்தா வுக்கு பிறகு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு, அஜித் இந்த திரைப்படத்தில், நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இதில் அவர் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.ஒருபாத்திரத்தில் வெள்ளை தாடியுடன் மற்றொரு பாத்திரத்தில் இளைஞனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட் வெளிவந்த வண்ணம் உள்ளது. மொத்தம் படப்பிடிப்பு 75 நாட்கள் நடக்கிறது. அதில் சென்னையில் மட்டும் 7ல் இருந்து 10 நாட்கள் நடக்குமாம்.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

இந்த படத்தையும் நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களை தயாரித்த போனி கபூர் தான் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு தாற்காலிகமாக “AK61” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.நடிகர் அஜித் குமார் ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளார்.ஷூட்டிங் இன்று துவங்கி குறைந்தது இரண்டு மாதங்களாவது தொடரும். தென்னிந்திய முன்னணி நடிகை ஒருவருடன் தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கான அறிவிப்பு இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும்” என்றார்.
இந்த படத்தில் இளைஞர் அவதாரமெடுக்கும் அஜித்குமார் படத்திற்காக 20 கிலோ எடையை குறைத்துள்ளாராம்.

முதல் நாள் சூட்டிங்கிலா முதல் காட்சியே பேங்க்கில் வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் அஜித் தாறுமாறான சூப்பர் கூலான லுக்கில் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக 70 நாட்கள் நடைபெறவுள்ளதாம்.வரும் தீபாவளிக்கு இந்த படம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தின் டைட்டில் மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

இந்த படத்திற்கு முன்பு எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் வக்கீலாக நடித்திருந்தார். அடுத்தாக வலிமை படத்தில் பைக்கில் இளைஞர்கள் கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்தும் போலீசாக நடித்திருந்தார். தற்போது பேங்க்கில் பணம் கொள்ளையடிக்கும் பின்னை கதையில் அஜித் நடிப்பதாக தெரிகிறது.

இந்த திருட்டு த்ரில்லருக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், சுப்ரீம் சுந்தர் ஆக்‌ஷன் கோரியோகிராஃபியைக் கையாள,படத்தில் அனிருத் இசைஅமைப்பதாக முதலில் கூறப்பட்ட நிலையில் தற்போது ஜிப்ரான் இசையமைப்பாளராக இப்படத்தில் புக் ஆகியுள்ளாராம். கதாநாயகி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

IMG 20220412 064137 - 2026
05 11 38 Ajith 61 Pooja - 2026
IMG 20220412 064205 - 2026
IMG 20220412 064235 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories