முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மாஹி ராகவ் என்பவர் தெலுங்கில் திரைப்படம் இயக்க முடிவு செய்துள்ளார்.
ராஜசேகர ரெட்டி கேரக்டரில் மம்முட்டியையும், அவருடைய மனைவி கேரக்டரில் நயன்தாராவையும் நடிக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்
முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மர்மமாக மரணம் அடைந்தது குறித்த காட்சிகள் இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மம்முட்டி-நயன்தாரா ஆகிய இருவரும் மலையாளத்தில் இணைந்து பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும் தெலுங்கில் முதன்முதலில் இணைந்து நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது