பிரபல நடிகர், இயக்குனர் பார்த்திபனின் மகள் கீர்த்தனாவின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. பிரபல திரைப்பட எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்ஷய் தான் மாப்பிள்ளை. இருவரும் காதலித்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் இன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் திருமணம் இனிதே நடைபெற்றது.
இந்த திருமணத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின், சூர்யா, விஷால், சரத்குமார், டி.ராஜேந்தர், பாரதிராஜா, விக்ரமன், கே.எஸ்.ரவிகுமார், இசைஞானி இளையராஜா, வைரமுத்து உள்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் கீர்த்தனா என்பதும் இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற தேசிய விருதை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.