
பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தற்போது இயக்கி வரும் ‘வடசென்னை’ திரைப்படம் இன்னும் ஒருசில வாரங்களில் படப்பிடிப்பு முடிந்துவிடும் நிலையில் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படம் மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டிருந்தாலும் ‘வடசென்னை 2’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தான் தொடங்கும் என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய்யை சந்தித்த இயக்குனர் வெற்றிமாறன் ஒரு அட்டகாசமான ஆக்சன் கதையை கூறியதாகவும், இந்த படத்தில் நடிக்க விஜய் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தெரிகிறது. எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு ‘விஜய் 62’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்முறையாக தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறனுடன் விஜய் இணையவுள்ளதால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.



