உருவாகிறது பிரபாகரன் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: சென்சார் அனுமதிக்குமா?

இலங்கையில் தனி ஈழத்திற்காக போராடிய விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தயாரிக்க ஸ்டுடியோ 18 என்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இலங்கையில் தனி ஈழத்திற்காக போராடிய விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தயாரிக்க ஸ்டுடியோ 18 என்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த படத்தை வெங்கடேஷ்குமார் என்பவர் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ஸ்டுடியோ 18 நிறுவனம் இதற்கு முன்னர் தயாரித்த ‘நீலம்’ என்ற படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் தர மறுத்துவிட்டது. இதனால் இலங்கையின் இனப்படுகொலை குறித்த இந்த படம் இன்று வரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் ‘பிரபாகரன்’ வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் உருவானால் அந்த படத்தை சென்சார் அனுமதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.