
தி ஆடார் லவ், என்ற படத்தில் நடித்து வரும் நடிகை ப்ரியாவாரியர், அந்த படத்தின் டீசரில் இடம்பெற்ற கண்ணசைவு காட்சியால் பிரபலமானார். தற்போது நடித்து கொண்டே கல்லூரியில் படித்து வரும் ப்ரியாவாரியர், கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரபலமானதால் அவர் எங்கு போனாலும் ரசிகர்கள் அடையாளம் கண்டு கொள்கின்றார்களாம்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த ப்ரியாவாரியர், ‘சினிமாவில் பெரிய நடிகை ஆகவேண்டும் என்றும் மலையாளம், தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழி படங்களிலும் நடித்து நல்ல நடிகை என்று பெயர் எடுக்க வேண்டும் என்பது தான் தாந்து லட்சியம் என்று கூறியுள்ளார்.
மேலும் தற்போது தமிழ், மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளிவரும் என்றும் அவர் கூறியுள்ளார்



