
திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் மீண்டும் ரீஎண்ட்ரி ஆன நடிகை ஜோதிகா நடித்த ’36 வயதினிலே, மகளிர் மட்டும் மற்றும் நாச்சியார் ஆகிய படங்கள் நல்ல வாரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது அவர் மணிரத்னம் இயக்கி வரும் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜோதிகா ஆணாதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் கேரக்டரில் நடித்து வருகிறாராம். இந்த படத்திற்காக அவர் பல பெண் தலைவர்களின் மேனரிசத்தை தெரிந்து கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஜோதிகா இதுவரை நடித்த கேரக்டர்களில் இது முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளான்ர்.
அரவிந்த்சாமி அரசியல் வாதியாகவும், சிம்பு என்ஜினீயராகவும், விஜய்சேதுபதி இன்ஸ்பெக்டராகவும் அருண் விஜய் வில்லனாகவும் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு 40% முடிந்துவிட்டதாகவும், கோலிவுட் ஸ்டிரைக் முடிந்தவுடன் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.



