
சல்மான்கானுக்கு அபூர்வ வகை மான்களை கொன்ற வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை என்ற தீர்ப்பு வழங்கப்பட்டதும் பாலிவுட் திரையுலகமே அதிர்ந்தது.
நீதிமன்றமே சல்மான்கானை குற்றவாளி என்று அறிவித்தபோதிலும் பாலிவுட் திரையுலகில் இருந்து சல்மான்கானை எதிர்த்து ஒரு விமர்சனமும் வரவில்லை. அந்த அளவுக்கு அவர் பாலிவுட்டை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்
இந்த நிலையில் நடிகை சோபியா துணிச்சலாக சல்மான்கான் சிறை சென்றது சரிதான் என்றும் அவர் செய்த பாவம் தான் அவரை சிறைக்கு அழைத்து சென்றது என்றும், பூமியில் உள்ள உயிரினங்களை கொல்வது பாவம் என்பதை இனிமேலாவது அவர் உணர்வார் என்றும் கூறியுள்ளார்.



