தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்துவிட்டன. 10ஆம் வகுப்பு மானவர்களுக்கு ஏப்ரல் 16ஆம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைகின்றன. இதனையடுத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஏப்ரல் 21-ந்தேதி முதல் கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல். 20-ந்தேதி முதல் கோடை விடுமுறை ஆகும்.
மேலும் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் ஜூன் மாதம் 1-ந்தேதி திறக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஏப்ரல் மாதம் இறுதி நாள் வரை தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு முதல் முதலாக ஏப்ரல் 19-ந்தேதி கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.
இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.