சமீபத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தனக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்தவர்களின் பெயர்களை பட்டியலிட்டு வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் பவர்ஸ்டார் பவன்கல்யாணை கடுமையாக விமர்சனம் செய்தர். இதனால் பவன்கல்யாண் ரசிகர்கள் ஸ்ரீரெட்டிக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஸ்ரீரெட்டியை ஆட்டி வைப்பது ராம்கோபால் வர்மா மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு என பவன்கல்யாண் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
“ஸ்ரீரெட்டி மூலம் அரசியல் ரீதியாக என்னை களங்கப்படுத்த முயற்சி நடந்து இருப்பது நிரூபணமாகி உள்ளது. இதற்காக ரூ.10 கோடி பேரம் நடந்து இருப்பதும் தெரியவந்துள்ளது. அதில் ரூ.5 கோடியை ஸ்ரீரெட்டிக்கு தருவதாக கூறியுள்ளனர். இதன் பின்னணியில் டைரக்டர் ராம்கோபால் வர்மா மட்டுமின்றி சந்திரபாபுவின் மகனும் அமைச்சருமான லோகேசும் இருக்கிறார். சந்திரபாபு நாயுடு மேற்பார்வையில்தான் என்னை பழிவாங்க முயற்சிகள் நடந்துள்ளன.”



