ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தமன்னா?

சினி நியூஸ் சினிமா

sridevi 3 - 2026சமீபத்தில் சாவித்திரி வாழ்க்கை வரலாறு திரைப்படம் ‘நடிகையர் திலகம்’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் இன்னும் ஒருசில நடிகைகளின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் திரைப்படம் எடுக்க திட்டமிடப்பட்டு வருகிறது. ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரே இந்த படத்தை தயாரிப்பார் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.\

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க நடிகை தமன்னா ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. இதுகுறித்து தமன்னா கூறியபோது, ‘சமீப காலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிகம் தயாராகி வருகின்றன. அந்த படங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. நானும் அதுபோன்ற வாழ்க்கை வரலாற்று படமொன்றில் நடிக்க ஆசைபடுகிறேன். நடிகை ஸ்ரீதேவி, சானியா மிர்சா ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படங்களில் நடிக்க விருப்பம் உள்ளது” என்று கூறினார். தமன்னாவின் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.