
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விக்ரம் நடித்த ‘சாமி 2’ படத்தின் டிரைலர் வெளியானது .இந்த டிரைலருக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகளவில் வெளிவந்து கொண்டிருந்ததால் படக்குழுவினர்களும் விக்ரம் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்
இந்த நிலையில் சற்றுமுன் விக்ரம் நடித்து வரும் இன்னொரு படமான ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் அட்டகாசமாக ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருப்பதால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு இணையதளங்களிலும் வைரலானது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் விக்ரமை கலாய்த்த நெட்டிசன்கள் இன்று அவரை வானளவுக்கு பாராட்டி வருகின்றனர். இந்த படத்தின் டீசருக்கு கிடைத்த வெற்றி குறித்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இயக்குனர் கவுதம் மேனன் கூறியதாவது: ஒவ்வொரு படத்திற்கும் ஒரு பயணம் உண்டு. இந்த படத்திற்கும் தான் நீண்ட, அழகான பயணம் இருக்கிறது. நமது எதிர்பார்ப்பு பெரிதாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் போது நேரம் அதிகமாக தேவைப்படுகிறது. அது எளிதாக முடிந்து விடாது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது’ என்று கூறியுள்ளார்.
விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிதுவர்மா, சுரேஷ் மேனன், பார்த்திபன், சிம்ரன், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார் இந்த படத்தை உலகம் முழுவதும் லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது.
https://www.youtube.com/watch?v=qjLDQDr_Q-M



