June 13, 2025, 7:47 PM
31.6 C
Chennai

கலர்லெஸ் – காலா…! திரை வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அரைவேக்காடு அரசியல்!

kaala relea

காலா – KAALA – கலர்லெஸ் …

KAALA

சூப்பர் ஸ்டார் படம்னாலே எதிர்பார்ப்புக்கு பஞ்சமிருக்காது . இத்தனை வருஷமா அரசியலுக்கு வரேன் , வரேன்னு பூச்சாண்டி காட்டிக்கிட்டு இருந்தவரு முத தடவையா கட்சி ஆரம்பிச்சு 234 தொகுதிகள்ளையும் போட்டியிடறேன்னு சொன்னதுக்கப்புறம் வந்த படம்ன்றதுனால ஹைப் பத்தி சொல்லவே வேணாம் . ஆனா ரெண்டாவது தடவையா சேர்ந்திருக்குற ரஞ்சித் – ரஜினி காம்போ ஜெயிச்சிருக்கான்னு கேட்டா 50:50 தான் சொல்ல முடியும் …

மும்பை தாராவி ல இருக்குற தமிழ் தாதா காலா எ கரிகாலன் ( ரஜினிகாந்த் ) அங்க இருக்குற மக்களுக்கு அவர் தான் எல்லாமே . கிட்டத்தட்ட 40000 கோடி மதிப்பிருக்குற அந்த ஏரியாவை ரியல் எஸ்டேட் பிஸினஸுக்காக வளைச்சுப் போட  பாக்குறார் லோக்கல் அரசியல்வாதி ஹரிதாதா ( நானா படேகர் ) . நாயகன் படத்துல வர ஒரு சீன முழு கதையாக்கி குடும்ப செண்டிமெண்ட் , நடப்பு  அரசியல் , ஆரிய ! திராவிட ! சித்தாந்தம் எல்லாத்தையும் சேர்த்து ரஜினி எனும் கருப்பு வண்ணத்தால் குலைத்துக் கொடுத்திருக்கிறார் ரஞ்சித் …

கபாலி மாதிரியே சூப்பர் ஸ்டாருக்கு வயசுக்கு ஏத்த ரோல் . பேரன் பேத்தி எடுத்து 60 வயசு மணிவிழா கொண்டாடினாலும் மனுசன் ஸ்டைல் , ஆக்சன் ல பின்னி பெடலெடுக்குறார் . ரஜினி ய இன்ச் பை இன்ச்சா ரசிக்கறவங்களுக்கு படம் வரப்பிரசாதம் . ஊருக்கே தலன்னாலும் மனைவிக்கிட்ட பம்முறதும் , பழைய காதலியை பார்த்து பரவசமாரதும் னு மனுஷன் பழைய குறும்ப விடவேயில்லை . ஸ்டேஷன் ல மினிஸ்டர பார்த்து ” யார்யா இவரு ” ன்னு கேக்குற ஸீன் ஒன்னு போதும் சூப்பர் ஸ்டாரோட  ஹியூமர் டச்சுக்கு …

RAJ

இண்டெர்வெல்லுக்கு அப்புறமா விஸ்வரூபம் எடுத்தாலும் ரஜினிக்கு ஈக்குவலான ரோல் ல நானா படேக்கர் . ” உன்னைத்தான்  கொல்ல நெனச்சேன் , ஆனா உன் மனைவியும் மகனும் செத்துட்டாங்க ” ன்னு ஸாரி சொல்லும் போது கொடூர வில்லனா இருந்தாலும் நடிப்பால் நெகிழ வைக்கிறார் . அவருக்கும்  ரஜினிக்குமான நேரடி சீன்கள் படத்துக்கு பெரிய ஹைலைட் . ஈஸ்வரி ராவ் என்கிற நடிகையை பார்க்க வைத்த ரஞ்சித்துக்கு நன்றி . ரஜினி யின் பழைய காதலி பற்றி பேச்சு வரும்போது வருத்தத்தை கூட  புருஷனை விட்டுக்கொடுக்காத முகபாவத்தோடு  காட்டும் பாங்கு அழகு …

கறுப்புக் கூட்டத்துக்கு மத்தியில் காலா வின் முன்னால் காதலி ஸரீனா வாக
வரும் ஹுமா குரேஷி வயசானாலும் வெள்ளை அழகு கொள்ளை அழகு . ஆனால் இவர் கேரக்டர் ஸ்கெட்ச்சில் குழப்பம் தெரிகிறது . படம் நெடுக தள்ளாடிக்  கொண்டே இருக்கும் சமுத்திரக்கனி  நடிப்பால் ஸ்டெடியாக நிற்கிறார் . ரஜினி யின் மகன்களாக  வரும் மணிகண்டன் , திலீபன் , அவரின் தோழி மராத்திப்பெண் , சம்பத் என எல்லாருமே மிக இயல்பாக நடித்திருப்பது பலம் .  பெரும்பாலும் ஒரே லொகேஷனில் பயணப்படும் படத்தை தொய்வில்லாமல் தூக்கி நிறுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் முரளி , எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் இருவருக்கும் பாராட்டுக்கள் . சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் கபாலி அளவு கவரவில்லை . ஆனால்  படத்தோடு ஒன்றி வருவது ஆறுதல் …

ரஞ்சித்துக்கு ரெண்டாவது முறையாக சூப்பர் ஸ்டாரோடு படம் , அதே தாதா வேடம் இந்த முறை மலேசியா இல்லை மும்பை . மனைவிக்கு பதில் ரொமான்ஸ் செய்ய முன்னாள் காதலி . மகளுக்கு பதில் அடிதடிக்கு மகன் . வெள்ளைத்தோல் மலேஷிய வில்லனுக்கு பதிலா  வெள்ளை ஜிப்பா போட்ட வட  இந்திய வில்லன் . இப்படி கபாலிக்கும் , காலாவுக்கும் நிறையவே ஒற்றுமை . ஆனா படம் பார்க்கும் போது இத யோசிக்க விடாம பாத்துக்கிட்டது இயக்குனரோட சாமர்த்தியம் . ரஜினி யை பார்த்து விட்டு அனுமதியில்லாமல்  போகும் நானா படேகரை திரும்ப ரஜினியிடமே வந்து பெர்மிசன் கேக்க வைக்கும் ஸீன் மாஸ் …

RAKA

பால் தாக்கரேவை நினைவுபடுத்தும் நானா படேகர் கேரக்டர் , சிவசேனை போன்ற கட்சிக்கொடி , ரஜினி படிக்கும் ராவணகாவியம், தூய்மை மும்பை , மனதின் குரல் என மோடி யை சீண்டிப்பார்க்கும் சீன்கள் , வில்லன் ஆள் கொல்லப்படும் போது ஆற்றில் கவிழும் விநாயகர் சிலை , முஸ்லீம் பெண் ஸெரீனா வை காலில் விழ சொல்லும் போது பின்னால் காட்டப்படும் ராமர் சிலை , கிளைமேக்ஸ் சண்டையில் நானா படேகரை இராமனாகவும் , ரஜினியை இராவணனாகவும் சித்தரிப்பது என்று படம் நெடுக வெறும் குறியீடுகளாக இல்லாமல் குடியிருப்புகளாகவே ரஞ்சித் தனது  அரைவேக்காடு அரசியல் சித்தாந்தங்களை ரஜினியை பயன்படுத்தி காட்டியிருக்கிறார் …

தாராவி யின்  தலைவர் காலா வும் தனது மக்களுக்கு எந்த வசதியும் செய்யவில்லை , செய்ய வரும் மற்றவர்களையும் தொறத்துகிறார் . கடைசிவரை அது தமிழ்நாடு போலவே முன்னேறாமல் போராட்டம் மட்டுமே செய்கிறது . நிஜத்தில் போராட்டங்கள் தீர்வாகாது என்று சொல்லிவிட்டு , நிழலில் போராட்டம் மட்டுமே செய்யும் ரஜினியை போல நாமும் பாவம் யாரவது அந்த ஸ்லம் மக்களுக்கு வீடு கட்டுவார்களா என குழம்பியே பார்க்கிறோம் . அதுவும் இண்டெர்வெல்லுக்கு பிறகு நெறைய சீன்கள் தமிழ் நியூஸ் சேனல் பார்ப்பதை போன்ற உணர்வையே தருகிறது …

இராமன் ஆர்யன் , இராவணன் திராவிடன் சரி . ஆனா இராமன் சத்ரியன் , இராவணன் பிராமணன் , அப்போ யாரு ஆர்யன் ? யாரு திராவிடன் ? . இந்தியா முழுமையையும் இணைத்திருக்கும் இந்து மதத்தை சிதைக்கும் நோக்கில் கார்டுவெல் விட்ட கட்டுக்கதையை ஆரிய திராவிட வாதம் . அதில் ரஞ்சித் சிக்கியதில் ஆச்சர்யமில்லை ஆனால் ரஜினி ? . வெள்ளை அழகு , கருப்பு அசிங்கம் என பார்க்காமல் கருப்பும் , சிகப்பும் அழகு என்கிறார்கள் . இரண்டுமே அழகு என கொள்ளாமல் கருப்பை மட்டும் தூக்கிப்பிடிப்பதும் ஒருவகை ஆணவம் தானே ?! . அதிகாரத்துக்கு எதிரான எளியவர்களின் போராட்டமே காலா . ஆனால் ரஞ்சித் அதை சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து அனைவரும் ரசிக்கும் விதத்தில் கலர்ஃபுல்லான படமாக கொடுக்காமல் தனது கருப்பு சித்தாந்தங்களை அதிகம் திணித்து கலர்லெஸ் ஆக்கி விட்டார் …

ரேட்டிங்க்   : 3 * / 5 * 

ஸ்கோர் கார்ட்42 

விமர்சனம்: வாங்க ப்ளாக்கலாம் அனந்து (அனந்தநாராயணன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

சம்பளம் வழங்கக் கோரி மதுரை பல்கலை., பணியாளர்கள் போராட்டம்!

ஆண்டுகளாகவே காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஊழியர்கள், அலுவலர்கள் சம்பளம் ஓய்வூதியம் வழங்கப்படாத கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு

போயிங் போய்விட்டது! 11A மட்டும் தப்பியது!

விமானம் மேலேற முடியாமல் திணறி தரை இறங்கியுள்ளது.அதாவது பறக்க போதிய உந்துவிசை கிடைக்காமல் தரையில் விழுந்துள்ளது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

அகமதபாதில் விமானம் விழுந்து பயங்கர விபத்து!

அமித் ஷா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோரை அகமதாபாத் செல்ல உத்தரவிட்டார்.

Topics

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

சம்பளம் வழங்கக் கோரி மதுரை பல்கலை., பணியாளர்கள் போராட்டம்!

ஆண்டுகளாகவே காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஊழியர்கள், அலுவலர்கள் சம்பளம் ஓய்வூதியம் வழங்கப்படாத கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு

போயிங் போய்விட்டது! 11A மட்டும் தப்பியது!

விமானம் மேலேற முடியாமல் திணறி தரை இறங்கியுள்ளது.அதாவது பறக்க போதிய உந்துவிசை கிடைக்காமல் தரையில் விழுந்துள்ளது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

அகமதபாதில் விமானம் விழுந்து பயங்கர விபத்து!

அமித் ஷா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோரை அகமதாபாத் செல்ல உத்தரவிட்டார்.

பெண்களை ‘ஓஸி’ என கேலி பேசும் திமுக.,வினர் இனி வெட்டியாக வீட்டில் அமர்வார்கள்!

வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணமா? மத்திய நிதி அமைச்சகம் சொல்வது என்ன?

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது என்று, மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. செய்தி ஊடகங்களின் தவறான தகவல்களுக்கு

பஞ்சாங்கம் ஜூன் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories