சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் கடந்த 7ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் முதல் நாளில் ரூ.1.74 கோடி வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இந்த நிலையில் கடந்த வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நான்கு நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.6 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இதுவரை சென்னையில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை ‘பாகுபலி 2′ படம் வைத்துள்ளது. இந்த சாதனையை காலா’ இன்னும் ஒருசில நாட்களில் முறியடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘காலாவுக்கு போட்டியாக வந்த ஒரே படமான ‘ஜூராஸிக் வேர்ல்ட்’ என்ற திரைப்படம் சென்னையில் கடந்த நான்கு நாட்களில் ரூ.1 கோடி கூட வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது



